தீபம் ஏற்றினால் சாபம் நீங்குமா..?

❖ தீபம் என்பது இறைவனின் அம்சம். தீபத்தை நாம் எந்த அளவுக்கு மனம் ஒன்றி வழிபடுகிறோமோ அந்த அளவுக்கு இறைவனை நெருங்க முடியும். ஒருவர் தினமும் விளக்கேற்றி இறைவழிபாடு செய்தால், அவர் மெய் உணர்வைப் பெற முடியும் என்று அப்பர் கூறியுள்ளார்.

தீபத்தால் சாபம் நீங்குமா :

★ கவனிப்பாரின்றி உள்ள கோவிலில் தீபம் ஏற்றி வைப்பது பித்ரு தோஷங்களையும், பித்ருக்களால் ஏற்பட்ட சாபத்தையும் போக்கும் சக்தி வாய்ந்த பரிகாரமாகும்.

★ வறுமையினால் துன்பப்படும் குழந்தைகளுக்கு உணவளிப்பது, பசு மாட்டைத் தினமும் பூஜித்தல், வேதம் அறிந்த பெரியோர்களின் ஆசியைப் பெறுதல், சிதைவு அடைந்த கோவில்களின் புனர்நிர்மாணத்திற்கு உதவுதல், அனாதை பிரேதத்தை, ஈமச் சடங்குகள் செய்ய வசதி இல்லாத குடும்பத்தினருக்குப் பொருள், பணம் உதவி செய்தல் போன்ற மகத்தான புண்ணிய காரியங்களின் பலன்கள் மேற்கூறிய தோஷங்களுக்குச் சக்தியுள்ள பரிகாரங்களாகும்.

பரிகாரங்களும், இனிய பலன்களும் :

✰ பசியோடு வருபவரை உபசரித்தால் மோட்சம் கிட்டும்.

✰ பசுவிற்கு பசும்புல், அகத்திக்கீரை, பழம் தந்தால் பிள்ளை வரம் கிடைக்கும்.

✰ துளசிச் செடி நட்டாலோ அல்லது அதற்கு தண்ணீர் ஊற்றினால் பாவம் அகலும்.

✰ மலர்ச்செடிகள் நட்டு வைத்தால் மங்கலங்கள் பெருகும்.

✰ ஆலயங்களைச் சுத்தம் செய்து கோலமிட்டால் ஆண்டவனின் அருள் கிடைக்கும்.

✰ தொழு நோயாளிக்கு வயிராற விருந்து படைத்தால் கர்மம் அகலும்.

✰ தினசரி தியானம் செய்வதால் நிம்மதியும், ஞானமும் கூடிவரும்.

✰ காக்கைக்கு காலையில் உணவிட்டால் பித்ருக்களால் நன்மை உண்டாகும்.

✰ உழவாரப் பணிகளை (கோவிலுக்கு சேவை செய்வது) மேற்கொண்டால் பிறவிப் பயனை அடைய இயலும்.

பலன் அளிக்க கூடிய பரிகார ஸ்தலங்கள் :

➚ சூரியன் - சூரியனார் கோவில்

➚ சந்திரன் - திருப்பதி

➚ குரு - ஆலங்குடி, திருச்செந்தூர்

➚ சுக்கிரன் - ஸ்ரீ ரங்கம்

➚ புதன் - திருவெண்காடு, மதுரை மீனாட்சி அம்மன் கோவில்

➚ செவ்வாய் - வைத்திஸ்வரன் கோவில்

➚ சனி - திருநள்ளாறு

➚ ராகு - திருநாகேஷ்வரம்

➚ கேது - காளாஸ்திரி (ஆந்திரப் பிரதேசம்)

 

கோவில் மூடியிருக்கும் போது கடவுளை வணங்கலாமா?

➠ கோயில் மூடியிருக்கும் போதும், திருமஞ்சன பூஜையின் போதும், திரையிட்டிருக்கும் போதும் கடவுளை வழிபடக் கூடாது.

➠ வீட்டு பூஜையில் கற்பூர தீபம் தானே குளிர்ந்து விடுவதுதான் நல்லது. நாம் அணைக்கக் கூடாது.

➠ திருக்கோவிலின் பிரதான வாசல் வழியேதான் கோயிலுக்குள் செல்ல வேண்டும்.

➠ அர்ச்சனைப் பொருட்களை இடது கையால் எடுத்துச் செல்லக் கூடாது.

➠ புல்லாங்குழல் ஊதும் தனி கிருஷ்ணன் படம், விக்கிரகம், காலண்டர் ஆகியவற்றை வீட்டில் வைக்கக் கூடாது.

➠ எலுமிச்சம் பழத் தீபம் விளக்கைக் கோயிலில் மட்டுமே ஏற்ற வேண்டும். வீடுகளில் ஏற்றக் கூடாது.

➠ மகாலட்சுமி அமர்ந்த நிலையில் உள்ளபடம். விக்கிரகம் ஆகியவற்றையே வீட்டில் வைக்க வேண்டும்.

➠ செவ்வாய் கிழமை, புதன்கிழமை பகல், வெள்ளிக்கிழமை குத்து விளக்கைத் துலக்கி கழுவக் கூடாது.

➠ சனி பகவானுக்கு வீட்டில் எள் விளக்கு ஏற்றக் கூடாது. நல்ல காரியங்கள் பற்றிப் பேசும் போது, எள் அல்லது எண்ணெய் பற்றிப் பேசக் கூடாது.

➠ வாழைப்பழம் சாப்பிட்ட பின் மோர் சாப்பிடக் கூடாது. பூஜை அறையில் தெய்வங்களை வடக்குப் பார்த்து வைக்கக் கூடாது.

➠ இறைவன் சன்னிதி போன்ற தெய்வீக அலை உள்ள இடத்தில் யோசித்தால் நல்ல முடிவு கிடைக்கும்.

➠ திருப்பதி, திருத்தணி, பழநி, திருச்செந்தூர் போன்ற கோவில் ஸ்தலத்திற்குச் சென்றால் அங்கிருந்து நேராக அவரவர் வீட்டிற்கு செல்ல வேண்டும்.

➠ ருத்ராட்சம் அணிவோர் இறுதிச் சடங்குகளுக்குச் செல்லும் பொழுது அதைக் கழற்றி வைத்து விட்டுத் செல்ல வேண்டும்.

➠ குங்குமத்தை வலது கை மோதிர விரலில் இட்டுக் கொள்வதே நல்லது. விக்கிரகத்திற்கு தீபாராதனை நடக்கும்போது கண்களை மூடிக்கொண்டு வணங்கக் கூடாது.

➠ சுவாமிக்கு எடுக்கும் ஆரத்தியில் சுண்ணாம்பு சேர்க்கக் கூடாது. அதுவே மனிதர்களுக்கு எடுக்கும் போது சுண்ணாம்பு சேர்க்கலாம்.

➠ பசுக்களோடு மற்றும் ராதையுடன் கூடிய புல்லாங்குழல் ஊதும் கிருஷ்ணன் படத்தை வீட்டில் வைத்துக் கொள்ளலாம்.

➠ கர்ப்பிணிப் பெண்களோ அல்லது அவர்களின் கணவரோ சிதறு தேங்காய் உடைக்கக் கூடாது.

➠ இறந்த முன்னோர்களின் படங்களை சாமி படங்களுடன் வைத்து வணங்குதல் கூடாது. தனியாக வீட்டில் வேறொரு இடத்தில் வைக்க வேண்டும்.

தானங்களால் ஏற்படும் பலன்கள்

 நாம் பிறருக்கு தானம் செய்வதால் நமக்கு கிடைக்கும் பலன்களும் அவற்றுள் முக்கியமானவைகளும்....!

ஆடை தானம் :
➟ ஆயுள் விருத்தி, குழந்தைகள் சிறுவயதில் இறந்து விடுவது தடுக்கப்படும். கண்டாதி தோஷம் விலகும். அவரவர் பிறந்த நட்சத்திர நாளில் ஆடை தானம் செய்வது மிக நன்று.

➟ வியாழக்கிழமையன்று ஆடை தானம் செய்வதால் பெண்களிடம் நல்லுறவும், சுக போக பாக்கிய விருத்தியும், உடல் வலிமையும் உண்டாகும்.

தேன் தானம் :
    ➟ புத்திர பாக்கியம் இல்லாதவர்கள், கர்ப்பப்பை வலிமை இல்லாதவர்கள், வெண்கலப் பாத்திரத்தில் தாரா பலன் உள்ள நட்சத்திரத்தன்று (இதை அறிய உங்கள் ஆஸ்தான ஜோதிடரை அணுகவும்) சுத்தமான தேனை தானம் செய்ய வேண்டும்.

நெய் தானம் :
  ➟ பாவக்கிரக திசை நடப்பவர்கள் (6, 8, 12ஆம் அதிபதியின் திசை), நோய் தொல்லையால் அவதிப்படுபவர்கள் வெண்கலக் கிண்ணத்தில் சுத்தமான நெய் தானம் செய்ய வேண்டும். சகலவிதமான நோய்களும் தீரும்.

தீப தானம் :
   ➟ இஷ்ட தெய்வ சன்னதியில் மாதம் ஒருமுறை 10 தீபம் ஏற்றினால் கண் கோளாறுகள் தீரும். ஏழைகள், பிராமணர்கள் அல்லது கோவில்களுக்கு மின்விளக்கு வசதி செய்து கொடுத்தால் பார்வைத்திறன் எப்போதும் பாதுகாக்கப்படும்.

அரிசி தானம் :
   ➟ பூர்வ ஜென்ம தோஷங்கள், தெரிந்தும் தெரியாமலும் செய்தவை விலக ஏழை அல்லது பிராமணர்களுக்கு அரிசி தானம் செய்ய வேண்டும். யாருக்கு வீடு வாசல் இல்லையோ அவர்களுக்கு தானம் செய்தால் தான் நாம் தானம் செய்த பலன் நமக்கு உண்டு.

கம்பளி - பருத்தி தானம் :
    ➟ வாயு சார்ந்த நோய் உள்ளவர்கள் வயது முதிர்ந்தவர்களுக்கு கம்பளி தானம் செய்தால் நோய் தீரும். வெண்குஷ்டம் அறிகுறி தென்பட்டால் பருத்திதானம் (பருத்தி உடைகள்) செய்து அதிலிருந்து மீண்டுவிடலாம்.

➟ வஸ்திர தானம் - ஆயுளை விருத்தி செய்யும்.

➟ பூமி தானம் - பிரமலோகத்தையும்,

➟ கோதுமை தானம் - ரிஷிக்கடன், தேவகடன், பிதுர்கடன் ஆகியவற்றை அகற்றும்.

➟ தீப தானம் - கண்பார்வை தீர்க்கமாகும்.

➟ நெய், எண்ணைய் தானம் - நோய் தீர்க்கும்.

➟ தங்கம் தானம் - குடும்ப தோஷம் நீங்கும்.

➟ வெள்ளி தானம் - மனக்கவலை நீங்கும்.

➟ நெல்லிக்கனி தானம் - ஞானம் உண்டாகும்.

➟ பால் தானம் - துக்கம் நீங்கும்.

➟ தயிர் தானம் - இந்திரிய விருத்தி ஏற்படும்.

➟ தேங்காய் தானம் - நினைத்த காரியம் நிறைவேறும்.

➟ பழங்கள் தானம் - புத்தியும் சித்தியும் கிட்டும்.

நல்ல ஆரோக்கியத்திற்கான வாஸ்து மிக அவசியம்!

நாம் வாழும் சுற்றுச்சூழல் அல்லது நம் வீடுஃபணியிடத்தில் காணப்படும் சுற்றுப்புறம் ஆகியவற்றை பொறுத்தும் நம் உடல்நல ஆரோக்கியம் அமையும். டென்ஷன், பகைமை அல்லது காண முடியாத பிரச்சனை போன்றவைகள் இருந்தால், இவைகளை போக்க வாஸ்து சாஸ்திரங்கள் உதவிடும்.

🌠 படுக்கையில் தூங்கும் போது, உங்கள் தலை தெற்கை நோக்கி இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு வடா அல்லது கபா தோஷங்கள் இருந்தால், இடது பக்கம் திரும்பி தூங்கலாம். அதேப்போல் பிடா தோஷம் உடையவர்கள் தங்களின் வலது பக்கம் நோக்கி தூங்க வேண்டும்.

🌠 வீட்டின் நடுவே படிக்கட்டுகள் இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் அது முக்கிய உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும். படிக்கட்டு வைக்க வேண்டிய அவசியம் இருந்தால் அவற்றை ஓரமாக வைத்திட வேண்டும்.

🌠 வீட்டின் மத்திய பகுதி காலியாக இருக்க வேண்டும் அல்லது எந்த ஒரு கனமான மரச்சாமான்களை வைத்திருக்கக் கூடாது. அதற்கு காரணம், வீட்டின் மைய பகுதி தான் பிரம்மஸ்தானம்.

🌠 தலைக்கு மேல் உள்ள உத்தரங்கள் வீட்டின் மைய பகுதி வழியாக செல்ல கூடாது. ஏனெனில் அவை குழப்பமான மனநிலையை ஏற்படுத்தும். 🌠 நல்ல ஆரோக்கியத்திற்கு வீட்டிலுள்ள அக்னி தனிமங்கள் சமநிலையுடன் இருப்பது முக்கியமாகும். உங்கள் வீடு தெற்கு திசையை நோக்கியிருந்தால் அல்லது இத்திசையில் சரிவு இருந்தால், அல்லது வட கிழக்கு திசையை நோக்கி ஜெனரேட்டர் இருந்தால் அல்லது தென் கிழக்கு பகுதியில் பு+மிக்கு அடியிலான தண்ணீர் தொட்டி இருந்தால், உடல்நல பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

🌠 இப்பிரச்சனைக்கு தீர்வு காண, தெற்கு சுவற்றில் ஒரு கதவை வைத்திட வேண்டும். அது எப்போதும் மூடியிருக்க வேண்டும். கூடுதலாக, அது மரக்கதவாக இருக்க வேண்டும். அதேப்போல் வெளிப்புற சாலை தெரியாமல் அது உயர்ந்த கதவாக இருக்க வேண்டும்.

🌠 அக்னி மூலையில், அதாவது வீட்டின் தென் கிழக்கு மூலையில் தினமும் மெழுகுவர்த்தி ஒன்றை ஏற்ற வேண்டும்.

🌠 வீட்டை சுற்றியுள்ள சுவரும் அதன் கதவும் ஒரே உயரத்தில் இருக்க வேண்டும். கதவின் இரு பக்கங்களிலும் சிட்ரஸ் பழங்கள் அல்லது செடிகளை வளர்த்திடவும். இது நல்ல ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

🌠 உங்கள் வீட்டில் யாரேனுக்கும் உடல்நலம் சரியில்லை என்றால், அவரின் அறையில் சில வாரங்களுக்கு மெழுகுவர்த்தியை எரிய விடலாம்.

🌠 தென் திசையை நோக்கியுள்ள வீட்டில் நல்ல ஆரோக்கியம் பெருகிட ஆஞ்சநேயர் படத்தை வைக்கலாம்.

சம்மர் வந்தாச்சு கூலா இருக்க சில டிப்ஸ்!

☀ பருவகாலம் என்பது காலநிலை, சூழலில் ஆகியவற்றால் ஏற்படும் மாற்றத்தால் குறிப்பிடப்படுகின்ற வருடத்தின் பிரிவு ஆகும்.

☀ சூரியனைச் சுற்றிவரும் பூமியின் ஆண்டுச் சுழற்சி மற்றும் சுழற்சியின் சமதளத்திற்கு தொடர்புடைய பூமி அச்சின் சாய்வு ஆகியவற்றினால் பருவகாலம் ஏற்படுகிறது. மிதமான தட்பவெப்பமுள்ள துருவப் பிரதேசங்களில் பூமியின் மேற்பரப்பை எட்டும் சூரிய ஒளியின் அடர்த்தியில் ஏற்படும் மாற்றம், விலங்குகள் செயலற்றிருத்தல் அல்லது இடம்பெயர்தலுக்கு காரணமாக அமைவது மற்றும் தாவரங்கள் வளர்ச்சியை நிறுத்திக்கொள்வது ஆகியவற்றால் பருவங்கள் இலகுவாக வேறுபடுத்திப் பார்க்கப்படுகின்றன.

☀ மே, சூன் மற்றும் சூலை மாதங்களில் வடக்கு அரைக்கோளம் சூரியனை எதிர்கொள்வதால் நேரடியாக அதிக சூரிய ஒளி படுகிறது. இதே நிலைதான் நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் தெற்கு அரைக்கோளத்தில் ஏற்படுகிறது.

☀ இது சூரியமண்டல நிலைமாற்றத்தை அதிகரிக்கச் செய்யும் கோடை மாதங்களின்போது வானத்தில் சூரியன் உயரமான இடத்தில் இருப்பதற்கு காரணமாகும் பூமி அச்சின் சரிவு ஆகும். இருப்பினும் பருவகால தாமதத்தால் ஜூன், ஜுலை மற்றும் ஆகஸ்ட் மாதங்கள் வடக்கு அரைக்கோளத்தில் வெப்பமான மாதங்களாகவும், டிசம்பர், ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்கள் தெற்கு அரைக்கோளத்தில் வெப்பமான மாதங்களாகவும் இருக்கின்றன.

சம்மரை கூலாக்க சில டிப்ஸ்! :
☀ வெளியில் அலைபவர்கள், வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் ஒரே இடத்தில் உட்கார்ந்தபடி வேலை செய்பவர்கள் அடிக்கடி மோர் மற்றும் இளநீரை குடித்தால் உடல் சூடு குறைவதோடு, உடம்புக்கு புத்துணர்வு கிடைக்கும்.

☀ கோடை காலத்தில் எண்ணை பதார்த்தங்கள், காரம் முதலானவற்றை தவிர்க்கவும்.

☀ சுத்தமான குடிநீரையும் அதிகமாக குடிக்கலாம்.

☀ ஒவ்வொரு நாளும் நான்கு முறையாவது நல்ல சோப்பினால் தேய்த்து முகத்தைக் கழுவிக் கொள்வது நல்லது. இதனால் முகத்தில் வியர்வைத் துவாரங்கள் திறக்கப்படுவதோடு, தோலில் படியும் அழுக்குகளும் அகற்றப்படும்.

☀ குறிப்பாக இரவு படுக்கப் போகும் முன்பு, சோப்பு போட்டு முகத்தை கழுவுவது அவசியம்.

☀ தினமும் இரண்டு வேளை குளிக்கவும்.

☀ வேர்க்குருவைப் போக்க சந்தனத்தை பன்னீரில் குழைத்து, வேர்க்குருக்கள் மீது தடவலாம். நல்ல நிவாரணம் கிட்டும்.

☀ வெயிலின் தாக்கம் தாங்காமல் முகத்தில் கரும்புள்ளிகள் ஏற்படும். குறிப்பாக எண்ணைப் பசையான உடம்பு என்றால் முகத்தில் பருக்கள் ஏற்படுவதும் உண்டு.

☀ கரும்புள்ளிகள் மற்றும் பருக்கள் மறைய பப்பாளிப் பழச்சாறை முகத்தில் தடவவும். எக்காரணம் கொண்டும் பருக்களை கிள்ளக் கூடாது. இதனால் பருக்கள் அதிகமாகும்.

☀ முருங்கைக் கீரை மற்றும் ஏனைய கீரை வகைகளை வாரத்தில் 2 நாட்களாவது உணவில் சேர்த்துக் கொள்வதும் நல்லது.

☀ வியர்வை அதிகமாக சுரப்பதால் தோல் வறட்சியை ஏற்படுத்தும். இதற்கு பழச்சாறு, காய்கறிச்சாறு, சூப் மற்றும் குடிநீரை அடிக்கடி குடிக்கவும். 

குளிகன் அப்படியென்றால் என்ன?

தோஷத்தை போக்குபவரா?
குளிகன்

★ குளிகன் என்பவர் இந்து சமய தொன்மவியலின் அடிப்படையில் குளிகை என்ற காலத்தின் அதிபதியாவார். இவர் சனீசுவரன் - தவ்வை தம்பதிகளின் மகனாவார். இவரை மாந்தி என்றும், மாந்தன் என்றும் அழைக்கின்றனர். எருமைத் தலையும் மனித உடலும் கொண்டவராக காட்சியளிக்கிறார்.

★ சித்திரா பவுர்ணமி, கணக்கு போடும் எமதர்மனின் கணக்காளரின் பிறந்தநாள் என்று மட்டுமே எல்லாரும் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அதற்கு ஒரு சிறப்பான பொருளும் உண்டு. குளிகன் சிறப்பு என்ன?

➘ குளிகனை வைத்து அஷ்டவர்க்கம் என்று கணக்குப் போட்டு ஜோதிட உலகம் ஆயுள் காலத்தை துள்ளியமாக சொல்லி விடுகிறது. இந்த குளிகன் தோஷத்தை முற்றிலுமாக விளக்கிவிட கூடியவர் சித்திரகுப்தன். சித்திரகுப்தனை சித்திரா பவுர்ணமி அன்று மட்டும் வழிபடுவதோடு விட்டுவிடாமல் சனிக்கிழமை, அமாவாசை, வெள்ளி, ஞாயிற்றுக்கிழமை, ராகு கால நேரங்களில் வணங்குவது சிறப்பு உடையது.

➘ மனிதனின் ஜணன ஜாதகத்தில், அதாவது ஆயுள் காரகன் என்று சொல்லக்கூடிய சனி பகவானின் பிள்ளைகளான மாந்தி, குளிகன் ஆகிய இருவரில் குளிகன் என்ற உபகிரகமே ஒரு மனிதனின் ஆயுள் காலகட்டத்தை நிர்ணயம் செய்கிறார்.

➘ கடும் நோயால் பீடிக்கப்பட்டவர்கள் கூட சுகம் அடைய முடியும். இந்த சிறப்பு செய்தியை அனைவருமே அறிய வேண்டிய ஒன்றாகும். சித்திரகுப்தனின் வழிபாட்டிற்கான ஆலயங்கள் காஞ்சீபுரத்திலும், சிதம்பரத்திலும், தேனி மாவட்டம் கோடங்கி பட்டியிலும், திருவண்ணாமலையிலும் தனிச் சன்னதியும் உள்ளது.

➘ உலகிலுள்ள பாவ, புண்ணியங்களை குறைத்து வைக்கும் பணியை சிறப்பாக செய்து வரும் சித்திரகுப்தனுக்கு கரும பூமியான பாரத நாட்டில் 14 திருத்தலங்கள் இருப்பதாக புராணங்கள் சொல்கின்றன.

➘ உலகியல் வாழ்வில் தான, தர்மங்கள் செய்வதும், பிறருக்கு தம்மால் இயன்ற உதவிகள் செய்வதும், மற்றவர்களுக்கு நல்லவற்றை சொல்வதும் ஆகிய புண்ணிய செயல்களை செய்தால் நடக்கும் இப்பிறப்பிலும், மறுப்பிறப்பிலும் இறை அருளால் சொர்க்க வாழ்வே கிடைக்கும் என்று சாஸ்திரத்தில் கூறப்படுகிறது.

ஆற்றுக்குள் ஆயிரம் லிங்கம்

கர்நாடக மாநிலத்தின் வடக்குப் பகுதியில் சீர்சி என்ற ஊர் உள்ளது. இங்கிருந்து சுமார் 17 கிலோமீட்டர் பயணம் செய்தால், சால்மலா ஆற்றை அடையலாம்.

கர்நாடக மாநிலத்தின் வடக்குப் பகுதியில் சீர்சி என்ற ஊர் உள்ளது. இங்கிருந்து சுமார் 17 கிலோமீட்டர் பயணம் செய்தால், சால்மலா ஆற்றை அடையலாம். இந்த ஆற்றுக்குள் இருக்கும் பாறைகளில் ஆயிரம் (சஹஸ்ர) லிங்கங்கள் இருக்கின்றன. என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? உண்மைதான். ஆற்று நீரோட்டம் உள்ள பகுதிகளில்தான் இந்த அத்தனை லிங்கங்களும் உள்ளன. இந்த லிங்கங்கள் அனைத்தும் ஆவுடையாருடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஒருசில லிங்கங்களுக்கு முன்பு நந்தி சிலையும் செதுக்கப்பட்டுள்ளன. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியான இங்கு தென்மேற்கு பருவ மழையின் போது வெள்ளம் கரை புரண்டு ஓடும். அப்போது இந்தப் பகுதியைப் பார்ப்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

ஆலயங்களில் உள்ள லிங்கங்களுக்கு நடத்தப்படுவது போல் இந்த லிங்கங்களுக்கு அபிஷேகம் எதுவும் தேவையில்லை. ஏனெனில் இந்த லிங்கங்களுக்கு எந்நாளும், எப்பொழுதும் நீரால் அபிஷேகம்தான். இதுதான் இங்குள்ள சஹஸ்ர லிங்கங்களின் சிறப்பாகும். ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழாவின் போது, இந்தப் பகுதியில் குவியும் பக்தர்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காதது. இந்த இடத்திற்கு வருவது ஒரு வித மன அமைதியையும் கொடுக்கிறது.   சுற்றிலும் பச்சைப்பசேல் என்ற மரங்       களும், சலசலத்து ஓடும் நதியும், அதன் நடுவே அமைந்திருக்கும் லிங்கங்களும் ஆத்ம திருப்தியைக் கொடுக்கின்றன. இறைவன் எங்கும் நிறைந்தவன் என்பதை, இந்தப் பகுதியில் இருக்கும் போது நாம் உணர முடிகிறது.

இந்த ஆயிரம் லிங்கங்களும் எப்பொழுது உருவாக்கப்பட்டது? யாரால் உருவாக்கப்பட்டது? என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது. யாராக இருந்தாலும், இப்படியொரு சிந்தனையை வெளிப்படுத்தியவர், மிகப்பெரிய மகானாகவே இருக்க வேண்டும் என்கின்றனர், இந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள்.

இதே போல கம்போடியா நாட்டில் ஓடும் ஒரு ஆற்றிலும் ஆயிரம் லிங்கங்கள் செதுக்கப்பட்டுள்ளன. கம்போடியாவில் உள்ள உலகப் புகழ்பெற்ற கோவில் அங்கோர்வட்.  இங்கிருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கபல்சியான் என்ற ஊரில் ஓடும் ஆற்றில்தான் இந்த ஆயிரம் லிங்கங்களும் அழகுற வடிக்கப்பட்டுள்ளன. இங்கு சிவலிங்கம் தவிர, ராமர், கிருஷ்ணர், லட்சுமி போன்ற சுவாமி சிலைகளும் இருப்பது ஆச்சரியம் அளிப் பதாக உள்ளது. ஆனால் இந்தப்  பகுதிக்குச் செல்ல சபரிமலையைப் போன்று, காடுமேடுகளைக் கடந்துதான் செல்ல வேண்டும். கபால் சியான் என்றால் ‘பாலம்’ என்று பொருள். இங்கு இயற்கையாக அமைந்த கல் பாலம் ஒன்று இருக்கிறது. இதன் வழியாகத்தான், சஹஸ்ர லிங்கம் இருக்கும் இடத்தை அடைய வேண்டும். ஆறு மட்டுமின்றி இங்கு 50 அடி உயரம் கொண்ட ஒரு நீர்வீழ்ச்சியும் இருக்கிறது.

இந்தியாவின் ஒரு கரையில் உள்ள கர்நாடக மாநிலத்திலும், பல மைல்களுக்கு அப்பாலுள்ள கம்போடியா நாட்டிலும் ஒரே போன்று ஆயிரம் லிங்கங்கள் வடிக்கப்பட்டிருப்பதும், அதுவும் அவை அனைத்தும் ஆற்றுக்குள் இருக்கும் பாறைகளிலேயே செதுக்கப்பட்டிருப்பதும், இரண்டிற்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா? என்ற கேள்வியையும் எழுப்பாமல் இல்லை.

நாம் கடவுளை தரிசித்து வரும் முறைகள் சரியா?

அவசரமாக ஓடிகொண்டிருக்கும் இந்த காலத்தில் கோவிலுக்கு செல்ல கூட நேரம் ஒதுக்காமல் பார்த்த இடத்தில் கடவுளை வணங்கி விட்டு செல்கிறோம். ஆனால் கடவுளை வணங்கும் முறையில் பல சாஸ்திர சம்ரதாயங்களை நம்முடைய முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆனால் அதை நாம் பின்பற்ற கற்றுக் கொள்ள வேண்டும். எனவே அதை பற்றிய சில ஆன்மீக தகவல்களை தெரிந்துக் கொள்ளுங்கள்..!

👉 மகாலட்சுமி அமர்ந்த நிலையில் உள்ளபடம். விக்கிரகம் ஆகியவற்றையே வீட்டில் வைக்க வேண்டும்.

👉 வீட்டு பு+ஜையில் கற்பு+ர தீபம் தானே குளிர்ந்து விடுவதுதான் நல்லது. நாம் அணைக்கக் கூடாது.

👉 திருக்கோவிலின் பிரதான வாசல் வழியேதான் கோவிலுக்குள் செல்ல வேண்டும்.

👉 அர்ச்சனைப் பொருட்களை இடது கையால் எடுத்துச் செல்லக் கூடாது.

👉 கோவிலிலிருந்து வீட்டிற்கு வந்ததும் சிறிது நேரம் கழித்துக் கை, கால்கள் கழுவலாம். குளிக்கக் கூடாது.

👉 எலுமிச்சம் பழத் தீபம் விளக்கைக் கோவிலில் மட்டுமே ஏற்ற வேண்டும். வீடுகளில் ஏற்றக் கூடாது.

👉 சுவாமிக்கு எடுக்கும் ஆரத்தியில் சுண்ணாம்பு சேர்க்கக் கூடாது. அதுவே மனிதர்களுக்கு எடுக்கும் போது சுண்ணாம்பு சேர்க்கலாம்.

👉 சனி பகவானுக்கு வீட்டில் எள் விளக்கு ஏற்றக் கூடாது. நல்ல காரியங்கள் பற்றிப் பேசும் போது, எள் அல்லது எண்ணெய் பற்றிப் பேசக் கூடாது.

👉 இறைவன் சன்னிதி போன்ற தெய்வீக அலை உள்ள இடத்தில் யோசித்தால் நல்ல முடிவு கிடைக்கும்.

👉 திருப்பதி, திருத்தணி, பழநி, திருச்செந்தூர் போன்ற கோவில் ஸ்தலத்திற்குச் சென்றால் அங்கிருந்து நேராக அவரவர் வீட்டிற்கு செல்ல வேண்டும்.

👉 ருத்ராட்சம் அணிவோர் இறுதிச் சடங்குகளுக்குச் செல்லும் பொழுது அதைக் கழற்றி வைத்து விட்டுத் செல்ல வேண்டும்.

👉 கோவில் மூடியிருக்கும் போதும், திருமஞ்சன பூஜையின் போதும், திரையிட்டிருக்கும் போதும் கடவுளை வழிபடக் கூடாது.

👉 குங்குமத்தை வலது கை மோதிர விரலில் இட்டுக் கொள்வதே நல்லது. விக்கிரகத்திற்கு தீபாராதனை நடக்கும்போது கண்களை மூடிக்கொண்டு வணங்கக் கூடாது.

👉 பெண்கள் மாதவிலக்கின்போது எக்காரணம் கொண்டும் பூ வைத்துக் கொள்ளக் கூடாது.

👉 செவ்வாய் கிழமை, புதன் கிழமை பகல், வெள்ளிக்கிழமை குத்து விளக்கைத் துலக்கி கழுவக் கூடாது.

👉 இறந்த முன்னோர்களின் படங்களை சாமி படங்களுடன் வைத்து வணங்குதல் கூடாது. தனியாக வீட்டில் வேறொரு இடத்தில் வைக்க வேண்டும்.

👉 வாழைப்பழம் சாப்பிட்ட பின் மோர் சாப்பிடக் கூடாது. பூஜை அறையில் தெய்வங்களை வடக்குப் பார்த்து வைக்கக் கூடாது.

👉 புல்லாங்குழல் ஊதும் தனி கிருஷ்ணன் படம், விக்கிரகம், காலண்டர் ஆகியவற்றை வீட்டில் வைக்கக் கூடாது.

👉 பசுக்களோடு மற்றும் ராதையுடன் கூடிய புல்லாங்குழல் ஊதும் கிருஷ்ணன் படத்தை வீட்டில் வைத்துக் கொள்ளலாம்.

👉 கர்ப்பிணிப் பெண்களோ அல்லது அவர்களின் கணவரோ சிதறு தேங்காய் உடைக்கக் கூடாது. முறையாக கடவுளை வணங்கி வேண்டி அருளைப் பெறுவோம்...!