அமாவாசை வழிபாட்டின் மகத்துவம்! 

👉 நம் ஊரில் உள்ள கோவில்களில் அமாவாசை அன்று சிறப்பாக பூஜை செய்யக் காரணம், அன்று தெய்வங்கள் மற்ற நாட்களில் சக்தியுடன் இருப்பதை காட்டிலும் அதிக சக்தியுடன் அமானுஷ்ய விஷயங்களிருந்து ஊரை காக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் அன்று சிறப்பாக பூஜை செய்யப்படுகிறது.

அமாவாசை அன்று வழிபடக்கூடிய தெய்வங்கள் :

👉 விநாயகர், குலதெய்வம், காளி, பிரத்யங்கரா தேவி, ஸ்ரீவாராஹி அம்மன், நரசிம்மர், ஆஞ்சநேயர், ஆற்றங்கரையில் வீற்றிருக்கின்ற சிவன் ஆலயங்கள் மற்றும் மாசாணியம்மன், அங்காள பரமேஸ்வரி.

👉 அமாவாசையன்று சர்வகோடி லோகங்களிலுள்ள மகரிஷிகள் உள்பட அனைத்து தேவதைகளும், ஜீவன்களும், காலச்சென்ற நம்முடைய முன்னோர்களும் பூலோகத்திற்கு வந்து புண்ணிய நதிக்கரைகளிலும், கடலோரங்களிலும் காசி, ராமேஸ்வரம், கயை போன்ற புண்ணிய தலங்களிலும் தர்ப்பண பூஜையை ஏற்றுக் கொள்கின்றனர் என்பது சாஸ்திரங்கள் நமக்கு உரைத்திடும் உண்மைகள்.

👉 சில சடங்குகளுக்கும் சில வழிமுறைகளுக்கும் அமாவாசை அன்று சிறந்தது. அதில் ஒன்று தான் பித்ரு தர்ப்பணம். முன்னோர்களில் மூன்று தலைமுறையினரையாவது நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். நமது முன்னோர்களும், பெற்றோர்களும் ஏற்கனவே இறைவனடி சேர்ந்திருந்தால் அவர்கள் அனைவரின் ஆன்மாக்களும் நம்மை எங்கிருந்தோ ஆசீர்வதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது ஐதீகம். நமது முன்னோர்களின் ஆன்மாக்கள் நம்மை சுற்றி எங்கும் வியாபித்துக் கொண்டிருக்கிறது. அமாவாசை அன்று பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால், அவர்களின் அருளாசியால் எண்ணற்ற நன்மைகள் ஏற்படும்.

காகத்திற்கு உணவிடுங்கள் :

👉 காகம் சனீஸ்வரருக்குரிய வாகனம் என்று அனைவருக்கும் தெரியும். ஆனால், பிதுர் எனப்படும் முன்னோர் வழிபாட்டிலும் காகத்திற்கு முக்கியத்துவம் உண்டு. காகம் எமலோகத்தின் வாசலில் இருக்கும் என்றும், எமனின் தூதுவன் என்றும் சொல்வதுண்டு. காகத்திற்கு சாதம் வைத்தால் எமலோகத்தில் வாழும் நம் முன்னோர் அமைதி பெற்று நமக்கு ஆசியளிப்பார் என்பது நம்பிக்கை.

👉 தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று பிற காக்கைகளையும் கரைந்து அழைத்த பின்னரே, காகம் உணவு உண்ணும். அப்படிப்பட்ட உயர்ந்த ஜீவனான காகத்திற்கு உணவிடுவதன் மூலம் பிதுர்களின் ஆசியைப் பெற முடியும்.

👉 முன்னோர்களுக்கு நாம் செய்யும் திதி பலன்களை நம்மிடம் இருந்து பெற்று பிதுர் தேவதைகளிடம் வழங்குபவர் சூரியன். அந்த தேவதைகளே மறைந்த நம் முன்னோரிடம் பலன்களை சேர்க்கின்றன. அதனாலேயே சூரியனைப் பிதுர்காரகன் என்கிறோம். அமாவாசை நாட்களில் தீர்த்தங்கரைகளில் நீராடும் போது, பிதுர்காரகராகிய சூரியனுக்கு அர்க்கியம் செய்வது (இரு கைகளாலும் நீர் விடுவது) மிகுந்த நன்மை தரும்.

👉 சமுத்திரத்தில் அல்லது புண்ணிய நதிகளில் நீராடியவுடன் முழங்கால் அளவு நீரில் நின்று கொண்டு, சூரியனை நோக்கி மூன்று முறை அர்க்கியம் செய்வதன் மூலம் சூரியனின் அருளைப் பூரணமாக பெறமுடியும்.

வசந்த நவராத்திரி பிறந்த கதை..!

சக்தி வழிபாட்டின், பண்டிகைகளில் முக்கியமானவை ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் மிகச் சிறப்பு வாய்ந்த நவராத்திரி விழாக்கள் தான். குளிர்கால (புரட்டாசி மாதம்) ஆரம்பமும், கோடை கால (பங்குனி மாதம்) ஆரம்பமும் எமனின் இரு தாடைகளாக விளங்குவதாக அக்னி புராணம் கூறுகிறது.

வசந்த நவராத்திரி - பங்குனி மாத அமாவாசை முதல் தொடங்கப்படும். இந்த நவராத்திரி ஸ்ரீராம நவமியுடன் முடியும். வசந்த நவராத்திரி 9 நாட்கள் கொண்டாடினால் உலகம் க்ஷேமம் அடையும் என்றும், ஒரு பட்ச நாட்கள் அதாவது 15 நாட்கள் (அமாவாசை - பௌர்ணமி வரை) கொண்டாடுதல் - வேண்டும் வரங்கள் கிடைக்க செய்யும் என்றும், மண்டல நாட்கள் அதாவது பங்குனி அமாவாசை முதல் சித்ரா பௌர்ணமி வரை 45 நாட்கள் கொண்டாடுவது சகல காரியங்களிலும் வெற்றியைத் தரும் என்றும் கூறுகின்றது.

வசந்த நவராத்திரியின் கதை :

ஒரு காலத்தில் துருவசிந்து என்ற மன்னர் கோசலா அரசாங்கத்தை ஆண்டு வந்தார். அவர் வேட்டையாடும் போது கொல்லப்பட்டார். அதனால் அவரின் மகனான சுதர்சன் இளவரசருக்கு முடி சு+ட ஏற்பாடு நடைபெற்றது. இருப்பினும் அண்டை அரசர்களான யு+தஜீத் மற்றும் வீரசேனா அந்நாட்டின் மீது படையெடுத்தனர். அப்போரில் வீரசேனாவை யு+தஜீத் மன்னர் வீழ்த்தினார். அதனால் தன் தாய் மற்றும் ஒரு அரவாணியுடன் இளவரசர் சுதர்சன் நாட்டை விட்டு தப்பித்து சென்றார். அவர்கள் பரத்வாஜா என்ற துறவியின் ஆசிரமத்தில் தஞ்சம் புகுந்தனர். இளவரசர் சுதர்சனை கொலை செய்ய அவரை தேடி யு+தஜீத் வந்தார்.

இருப்பினும் அந்த துறவி தஞ்சம் வந்தவர்களை நெருங்க விடவில்லை. அதனால் யு+தஜீத் திரும்பி சென்றார். பல வருடங்கள் கழித்து, ஒரு நாள், அத்துறவியின் மகன், அந்த அரவாணியை க்லீபா என்ற அவரின் அசல் பெயரில் அழைத்தார். இதனை க்லீ என்று புரிந்து கொண்ட அந்த இளவரசர், க்லீம் என்று அழைத்தார். க்லீம் என்றால் இறைதன்மை உடைய தேவியை அழைக்கும் மந்திரமாகும். இதனை மீண்டும் மீண்டும் உச்சரித்ததால், தேவியின் அருளை பெற்றார் இளவரசர்.

அவர் முன் காட்சி அளித்த தேவி, அவருக்கு சக்தி மற்றும் ஆயுதங்களை அளித்து அருள் வழங்கினார். பின்னர் சக்தி வாய்ந்த ஒரு அரசரின் மகளை அவர் கைப்பிடித்தார். தன் மாமனாருடன் சேர்ந்து யு+தஜீத் அரசனை வீழ்த்தி தன் அரசாங்கத்தை மீண்டும் கைப்பற்றினார் சுதர்சன். தன் அரசாங்கத்தை மீட்ட இளவரசர் சுதர்சன், தேவியை குளிர வைக்க வசந்த நவராத்திரி பு+ஜையை மேற்கொண்டார்.

இந்நேரத்தில் 9 நாட்கள் விரதத்தை மக்கள் கடைப்பிடிப்பார்கள். வசந்த நவராத்திரி பு+ஜையின் போது, தினமும் மாலை நேரத்தில் துர்கா சுக்தம் ஓதப்படும். பண்டிகையின் எட்டாவது நாளின் (அஷ்டமி) போது, சின்ன பெண் பிள்ளைகள் சில பேர் வீட்டிற்கு அழைக்கப்படுவார்கள்.

வீட்டின் குடும்ப தலைவர்கள் அவர்களுக்கு பாத பு+ஜை செய்து, அவர்களுக்கு விருந்து பரிமாறுவார்கள். சேலை, வளையல் மற்றும் பணம் என சின்ன சின்ன பரிசுகளை அந்த பிள்ளைகளுக்கு வழங்குவார்கள். தேவியின் பிரதிநிதிகளாக தான் இந்த பெண் பிள்ளைகள் பார்க்கப்படுகிறார்கள். அதனால் துர்க்கை அம்மனை போல் அவர்களை பாவித்து, அவர்களை ஒவ்வொரு வீட்டிற்கும் அழைக்கிறார்கள்.

வசந்த நவராத்திரி நல்பக்தியையும், அந்த நல்பக்தியால் நல்வாழ்வையும் அளிக்கக்கூடியது. வசந்த நவராத்திரி அம்பிகையின் வடிவமாகிய ராஜமாதங்கீஸ்வரி எனும் வடிவத்தைப் போற்றுவதாக அமையக்கூடியது. அம்மன் கோவிலில் ஒன்பது தினங்களிலும் காலை வேளையில் சிறப்பு அபிஷேகம் நடத்தப் பெறும். ஒன்பது தினங்களிலும் அம்பிகை ஒவ்வொரு சிறப்பு அலங்காரத்தில் காட்சி நல்குவாள்.

பைரவர் வணங்கும் முறைகள்

ஏன் தேய்பிறை அஷ்டமியில் பைரவரை வணங்க வேண்டும்?
தேய்பிறை அஷ்டமி..!

👉 அனைத்து சிவன் ஆலயங்களிலும் ஈசான்ய மூலை எனப்படும் வடகிழக்கு திசையில் நீலமேனியராய், நாய் வாகனத்துடன் பைரவர் காட்சி தருவார். ஸ்ரீ பைரவருக்கு பௌர்ணமிக்கு பின்வரும் தேய்பிறை அஷ்டமியில் பஞ்சதீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கி நல்லருள் கிட்டும். இலுப்பை எண்ணை, விளக்கெண்ணை, தேங்காய் எண்ணை, நல்லெண்ணை, பசு நெய் இவற்றினை தனித்தனி தீபமாக அகல் விளக்கில் ஏற்றலாம்.

👉 அஷ்டமி திதியில் மற்றும் பிரதி தமிழ் மாதம் எல்லாத் தேதியிலும் ஆயில்யம், சுவாதி, மிருகசீரிடம் நட்சத்திர தினங்களிலும் பைரவரை வழிபட்டால் உத்தியோகத்தில் மதிப்பும், பதவி உயர்வும் கிட்டும். தொழிலில் லாபம் உண்டாகும்.

👉 இந்த நாளில், பைரவருக்கு செவ்வரளி மலர்கள் சார்த்தி வழிபட்டால் மிகுந்த பலன்களை வாரி வழங்குவார் என்பது ஐதீகம். மேலும் பைரவருக்கு மிளகு கலந்த சாதம் நைவேத்தியமாகப் படைத்து வழிபடுவது, எதிரிகளைத் தகர்க்கும். எதிர்ப்புகளை விலக்கும்.

👉 இழந்த செல்வங்களை மீண்டும் பெறவும், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவவும், செல்வ செழிப்போடு வாழவும் தேய்பிறை அஷ்டமியன்று பைரவர் வழிபாடு செய்ய வேண்டும். நமக்கு செல்வ வளங்களை வழங்குவதற்கும், நம்மை நல்லவிதமாக வழிகாட்டி வாழ வைப்பதற்கும் பைரவர் வழிபாடு மிக முக்கியமானது.

ஏன் தேய்பிறை அஷ்டமியில் பைரவரை வணங்க வேண்டும்?

👉 ஏன் தேய்பிறை அஷ்டமியில் பைரவரை வணங்க வேண்டும் என்றால் அஷ்ட லட்சுமிகளும் அஷ்டமி அன்று தான் பைரவரை வணங்கி தங்களுக்கு தேவையான சக்தியை பெற்று மக்களுக்கு மற்ற எல்லா நாட்களும் செல்வங்கள் வழங்கி வருகின்றனர் என்பது ஆன்றோர்கள் மற்றும் சித்தர்களின் நம்பிக்கை.

👉 அதனால் தேய்பிறை அஷ்டமியன்று பைரவரை வழிபட, அஷ்ட லட்சுமிகளின் ஆசியும், பைரவரின் வரங்களும் ஒருங்கிணைந்து கிடைக்கும். தேய்பிறை அஷ்டமி திதிகளில் செவ்வாடை அணிவித்து, நெய் விளக்கு ஏற்றி, வடைமாலை சாற்றி, செந்நிற மலர்களைக் கொண்டு அர்ச்சித்து, வெள்ளைப் பு+சணியில் நெய் தீபம் ஏற்றிவர நல்ல பலன் கிடைக்கும்.

👉 ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால நேரத்தில் பைரவருக்கு 11 நெய் தீபம் ஏற்றி வடைமாலை சாற்றி சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

👉 பரணி நட்சத்திரம் வரக்கூடிய நாள் கால பைரவருக்கு விசேஷ நாட்கள் ஆகும். ஏனெனில் பரணி நட்சத்திரத்தில்தான் பைரவர் அவதரித்தார். எனவே பரணி நட்சத்திரக்காரர்கள் பைரவரை வழிபட்டால் புண்ணியமும், பலனும் அதிகமாக கிடைக்கும்.

👉 பைரவர் வழிபாட்டில் சிறந்தது சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு. இந்த வழிபாடு செய்வதற்கு தேய்பிறை அஷ்டமி உகந்த நாளாகும். குழந்தை இல்லாமல் வருந்தும் தம்பதியர், தொடர்ந்து 6 தேய்பிறை அஷ்டமி நாட்களில் செவ்வரளி மலர்கள் மற்றும் வில்வத்தால் பைரவரை அர்ச்சித்து, நெய் தீபம் ஏற்றி வழிபட, விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

பண கஷ்டம் தீர வழி!!

வீட்டில் ஏற்றும் காமா ட்சி விளக்கில் டைமண் கல்கண்டு போட்டு தீபம் ஏற்ற லஷ்மி கடாட்சம் ஏற்படும்.

வீட்டில் வெள்ளை புறாக் களை வளர்க்க பணத்தட்டுப்பாடு நீங்கும்

வீட்டில் பல வித ஊறுகாய் வைத்திருக்கவும், ஏனெனில் குபேரன் ஊறுகாய் பிரியர். எனவே பலவித ஊறுகாய் வைத்திருக்க குபேர சம்பத்து வரும்.

நமது வீட்டிற்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு நீர் அருந்த தரவும். பின் மஞ்சள் குங்குமம் தரவும். இதனால் ஜென்ம ஜென்மாந்திர தரித்திரம் தீர்ந்து பணவரவு ஏற்படும்.

அமாவாசை அன்று வீட்டு வாசலில் கோலம்போடக் கூடாது. தலைக்கு எண்ணெய் தடவக்கூடாது.பூஜை காலை பொழுதில் செய்யக் கூடாது. பிதுர்களை மட்டும் வழிபட பணம் வரும்.

வீட்டில் விளக்கு ஏற்றியவுடன் பால், தயர், குடிநீர், உப்பு,ஊசி, நூல் இவைகள் வீட்டைவிட்டு வெளியேறக் கூடாது.பணம் ஓடிவிடும்.

பொதுவாக இறை பக்தியில் இருப்பவர்களிடம் ஆசிபெறுவது புண்யபலம் கூடும். பண வரவு அதிகரிக்கும்.

வெள்ளளிக்கிழமை சுக்ர ஓரையில் மொச்சை, சுண்டலை மகாலஷ்மிக்கு நைவேத்யம் செய்து நமது குடும்பத்தினர் மட்டும் சாப்பிடவும். தொடர்ந்து செய்து வர குடும்பத்தில் பண புழக்கம் அதிகரிக்கும்.

அபிஜித் நட்சத்திரத்தில் (பகல் 12 மணி) அரவாணிக்கு திருப்தியாக உணவளித்து அவள் கையால் பணம் பெற பணம் நிலைத்திருக்கும்.

யாரொருவர் ஜாதகத்தில் லக்னத்திற்கு மூன்றில் சுக்ரன் நீசம், பகையின்றி இருக்கிறாரோ அவர் கையால் சுக்ர ஓரையில் பணம் பெற அன்றிலிருந்து நமக்கு சுக்ர திசை தான்.

பசுவின் கோமியத்தில் தினமும் சிறிதளவு குளிக்கும் நீரில் கலந்து குளிக்கவும், வீட்டில் தெளிக்கவும் .45 நாட்கள் விடாமல் செய்திட தரித்திரம் தீர்ந்து பணம்வரும்.

முழு பாசி பருப்பை வெல்லம்கலந்த நிரில் ஊற வைத்துபின் அதனை (மறுநாள்) பறவைக்கு, பசுவிற்குஅளித்திடவும். இதனை தொடர்ந்து செய்துவர பணத்தடைநீங்கும்.

வெள்ளிக் கிழமை பெருமாள் கோவிலில் தாயாருக்கு அபிஷேக த்திற்கு பசும் பால் வழங்கிட பணம் வரும். பச்சை வளையலை தாயாருக்கு அணிவித்திட பணம் வரும்.

பெண்கள் இடது கையில் வெள்ளி மோதிரம் அணிய தனப்ராப்தி அதிகரிக்கும்.

பசும் பாலை சுக்ர ஓரையில் வில்வ மரத்திற்கு ஊற்றவும். 24 வெள்ளிக் கிழமை செய்திட நிச்சியமாக பணம் வரும்.

பாசி பருப்பை ஒரு பச்சை பையில் மூட்டையாக கட்டி தலையடியில் வைத்து உறங்கி மறு நாள் அதனை ஒரு பிளாஸ்டிக் பையில் கொட்டி மூடி ஓடும் நீரில் விடவும் பணப்பிரச்சனை தீரும்.

தினசரி குளிக்கும் முன் பசுந் தயிரை உடல் முழுவதும் தடவி சிறிது நேரம் சென்று குளிக்க தரித்திரம் விலகும்.

குளித்தவுடன் முதுகை முதலில் துடைக்கவும் தரித்திரம் விலகும்.

தமிழ் மாதத்தில் முதல் திங்கட் கிழமை என தொடர்ந்து 12மாதமும் திங்கட்கிழமை திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கவும் நீங்கள் உறுதியாக கோட்டீஸ்வரர் ஆகலாம். பூர்வ புண்ணியம் இல்லாதவர் கூட லட்சாதிபதி ஆகலாம்.

அம்திஸ்ட் கல் 10 கேரட் வாங்கி பணப் பெட்டியில் வைக்க பணம் ஆகர்ஷணம் ஆகும். சீக்கிரம் செலவு ஆகாது.

குடியிருக்கும் வீட்டில் வட கிழக்கு பகுதியில் கிணறு,நெல்லி மரம், வில்வ மரம் இருக்க அந்த வீட்டில் லஷ்மி கடாட்சம் ஏற்படும்.

தினமும் காலையில் வெங்கடேச சுப்ரபாதம், விஷ்ணு சஹஸ்ரநாமம் ஒலிக்கும் வீட்டில் லஷ்மி நித்தமும் வாசம் செய்வாள்.

மகாலட்சுமிக்கு இளஞ் சிவப்பு நிற வஸ்திரம் சாத்தி வழிபடவசிய முண்டாகி செல்வ வரத்து உண்டாகும்.

அவரவர் நட்சத்திர தன தாரை ஓரை வெள்ளிக் கிழமை வரும் வேளையில் அரசமரத்தடி விநாயகருக்கு அகலில் 11தீபமும் ,11 முறை வலம் வந்து வழிபட்டால் பண வரவு நிரந்தரமாகும்.

வீட்டில் தலை வாசல் படியில் கஜலஷ்மி உருவத்தை வெள்ளி தகட்டில் பதித்து வைத்தால் செல்வம் சேர்ந்து கொண்டே இருக்கும்.

ஒவ்வொரு மாதத்தில் வரும் பெளர்ண மியன்று சத்தியநாராயண பூஜை செய்ய செல்வங்களை பெறலாம்.

ஐப்பசி மாத வளர் பிறையில் மகா லட்சுமியை வழிபடசெல்வம் பெருகும்.

தொடர்ந்து 11 பெளர்ணமி அன்று இரவு 8.30 மணிக்கு சொர்ணா கர்ஷன பைரவருக்கு தாமரை மாலை அணிவித்து பிரசாதமாக அவல், பாயாசம் படைத்து வழி படசொர்ண ஆகர்ஷ ணமாகும்.

மகாலட்சுமிக்கும், தன பண்டார குபேரருக்கும் திரிதள வில்வத்தால் அர்சித்து, வில்வ மாலை அணிவித்திட பணம் குவியும்.

ஐஸ்வர்ய தூப பொடியுடன், துளசி பொடியுடன் சேர்த்து அவரவர் தன ஓரையில் தூபம் போட செல்வம் குவியும்.

சுக்ர ஓரையில் உப்பு வாங்கிட செல்வம் குவியும்.

வௌளிக் கிழமை மாலை நேரத்தில் பசுவிற்கு உணவளிக்க செல்வம் சேரும்.

மகா லட்சுமியை கனக தாரா ஸ்தோத்திரம் கூறி திரிதள வில்வத்தால் அர்சித்திட செல்வம் ஆகர்ஷணம் ஆகும்.

சுத்தமான நீரில் வாசனை திரவியம் கலந்து இரு வேளையிலும் லஷ்மி மந்திரம் கூறியபடி தெளித்திட செல்வம் சேரும்.

சுக்ர ஓரையில் மொச்சை பயிர் வாங்கிட செல்வம் சேரும்.

சொர்ணா கர்ஷன பைரவருக்கு தூய பன்னீரில் அவரவர் பிறந்த தினத்தில் அபிஷேகம் செய்திட பணம் சேரும்.

பசுவுடன் கூடிய கன்றுக்கு உண வளித்தால் சகல செல்வங்களும் வசமாகும்.

வயதான சுமங்கலிக்கு மங்கல பொருட்களுடன் வளையல், மருதாணி சேர்த்து தானம் அளித்திட லஷ்மி அருள் பரிபூர ணமாக கிட்டும்.

மஞ்சள் நீருடன், வாசனை திரவியம் கலந்து வீட்டிலும்,தொழில் ஸ்தாப னத்திலும் தெளிக்க ஐஸ்வர்யம் பெருகும்.

ஆந்தை படத்தினை தொடர்ந்து பார்த்து வர பணம் ஆகர்ஷ ணமாகும்.

தங்க நகை அணிந்த திருப்பதி வெங்கடாஜலபதி படத்தில் காலை எழுந்தவுடன் கண் விழித்திட பணம் கிடைக்கும்.

தனாக ர்ஷண தைலத்தால் விளக்கு ஏற்றிட செல்வம் நிலையாக தங்கும்.

சொர்ணாகர்ஷன பைரவருக்கு 9 நெய் விளக்கு ஏற்றிட,தொடர்ந்து 9 வாரம் செய்து வர குடும்பத்தில் முன்னேற்றம்ஏற்படும்.

குபேரனுக்கு தாமரை திரி போட்டு விளக்கேற்றி வழிபட்டால் பணம் வரும்.

குல தெய்வ வழிபாடும், பித்ருக்கள் வழிபாடும் இடைவிடாமல் செய்து வர குடும்ப முன்னேற்றம் ஏற்படும்.

திருமலை வெங்கடா ஜலபதிக்கு வெண் பட்டு அணிவித்து வழிபட செல்வம் சேரும்.

துளசி மாடம் அமைத்து தொடர்ந்து அதனை பூஜை செய்து வர தீமைகள் நீங்கி நன்மை உண்டாகும்.

சொர்ண பைரவருக்கு பன்னீர் கொண்டு அபிஷேகம் செய்து, அதனை வீட்டில் தெளித்திட சொர்ண லாபம் கிட்டும்.

செவ்வாய் கிழமையில் செவ்வரளி கொண்டு செந்தூர் முருகனை வழிபட்டால் காரியத் தடை நீங்கி வளம் பெருகும்.

ஏகாதசியில் பெருமாள் பாதம் வரைந்து அர்சித்து வழிபட பூமி லாபமும், செல்வ வளம் கிட்டும்.

கோவிலில் லஷ்மி மீது வைத்த தாமரை மலரைக் கொண்டு வந்து பச்சை பட்டில் வைத்து மடித்து பணப் பெட்டியில் வைக்க பணம் சேரும்.

சம்பாதிப்பதில் ஒரு தொகையை சேர்த்து அதனை அன்னதானத்திற்கு செலவிட அதனை போல் ஐந்து மடங்கு நம்மிடம் வந்து சேரும்.

ஸ்ரீ ரங்கநாத பெருமாள் கோவிலில் பெருமாளுக்கு அணிவித்த சந்தனத்தை பெற்று அதனை தினமும் அணிந்து வர பணம் வரும்.

வெள்ளிக்கிழமை சுக்ர ஓரையில் மகாலட்சுமிஅஷ்டோத்திரம் சொல்லி செந்தாமரை இதழ் கொண்டுஅர்சிக்க தனலாபம் கிட்டும்.

ஐஸ்வர்ய லஷ்மி படத்தினில் வாசனை திரவியம் தடவிபணப்பையில் வைக்க பணம் ஆகர்ஷணம் ஆகும்.

தொடர்ந்து 11 நாள் ஸ்ரீ சூக்த பாராய ணத்தை வேதபண்டி தர்களை கொண்டு செய்ய லஷ்மி கடாடசம் நிரந்தரமாகும்.

ஸ்ரீ லஷ்மி குபேர சத நாம ஸ்தோத்திரத்தினை தீப தூபஆராதனையோடு கூறி வர அஷ்ட தரித்திரம் நீங்கிதனலாபம் பெறலாம்.

கனக தாரா ஸ்தோத் திரத்தினை கூறியும் கேட்டு வர பணம் கிடைக்கும்.

வீட்டில் சுமங் கலியாக இறந்த பெண்களை நினைத்து மஞ்சளாக பிடித்து அவர்களை நினைத்து வழிபட, சகல தோஷங்கள் விலகி குடும்பத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

மகாலட்சுமிக்கு பச்சை பட்டினை அணிவித்து வணங்க பணம் வரும்.

கற்பக விநாயகரை 1008 அருகம் புல் கொண்டு மகாசங்கட ஹர சதுர்த்தியில் அர்சித்து வணங்க தொழிலிலுள்ள தடை நீங்கி லாபம் கிட்டும்.

பச்சை பட்டு உடுத்திய லஷ்மி படத்தனை வாசலில் மாட்டி தினமும் தூபம் காட்டி வர அஷ்ட ஐஸ்வர்யங்களும் வசமாகும்.

செல்வத்திற்கு உரியவள் மகா லட்சுமி வெள்ளிக் கிழமை தினம் வழிபடவும் 24 வெள்ளிக் கிழமை வழிபாட்டால் பணம் கிடைக்கும்.

தன பண்டார குபேரனை வழிபட பணம் தடையின்றி கிடைக்கும்.

இந்து ராணி மந்திரம் ஜெபம் செய்ய ராஜயோக வாழ்வு வாழ பணம் கிடைக்கும்.

வியாழன் அன்று குரு ஓரையில் தட்சணா மூர்த்தி வழிபாடு செய்ய செல்வம் சேரும்.

வெள்ளிக் கிழமை காலை சுக்ர ஓரையில் சுக்ரன், மகாலஷ்மி இரு வரையும் மல்லிகை மலர் கொண்டு 33வாரம் வழிபட செல்வம் கிடைக்கும்.

செந்தா மரையில் அமர்ந்துள்ள தெய்வங்களை வழிபட பணம் கிடைக்கும்.

கனகதாரா ஸ்தோத்திரம், ஸ்ரீ சூக்தம், பாக்ய சூக்தம் சுக்ர ஓரையில் பாராயணம் செய்ய பணம் வரும்.

அவரவர் குல தெய்வத்தை தினம் அதி காலை நேரத்தில் நம்பிக்கையுடன் வழிபட பணம் வரும்.

அமாவாசை, முன்னோர்கள் இறந்த திதி இவைகளில் முன்னோர்களை வேண்டி தானம் செய்ய, நாம் செய்த அளவின் மடங்குகள் பணம் வரும்.

திருப்பதி வெங்கடா ஜலபதி, பத்மாவதி படம் வைத்து வழிபட பணம் வரும்.

தனதா யட்சணீ பூஜை வில்வ மரத் தடியில் தந்திர சாஸ்திரப்படி செய்ய ஏழே நாளில் பணம் கிடைக்கும்.

சௌபாக்கிய பஞ்சதசி மந்திரம் ஜெபிக்க கோடிகணக்கில் பணம் கிடைக்கும்.

சொர்ணாகர்ஷண பைரவர், சொர்ண கணபதி, தன வீரபத்ரன், சொர்ண காளி, சொர்ண வராகி இவைகளை வழிபட தங்க நகை கிடைக்கும்.

ஆந்தையை வழிபட பணம் கிடைக்கும்.

ஜோடி கழுதை படம், ஓடும் வெள்ளை குதிரை படம்,அடிக் கடி பார்க்க பணம் வரும்.

தனாகர்ஷண மூலிகை சட்டை பாக்கெட்டில் இருக்க பணம்குறையாது.

பசுவின் பிருஷ்ட ஸ்பரிசம் தனம் தரும்.

ஒத்தை பனை மர முனீஸ் வரனை ஏரளஞ்சில் தைல தீபமேற்றி வழிபட அன்றே பணம் கிடைக்கும்.

வியாழக் கிழமை குபேர காலத்தில் குபேரனை வழிபட பணம் வரும்.

ஒருவருக்கு பணம் கொடுக்க வேண்டுமென்றால் வாசல்படியில் நின்று கொண்டு கொடுக்கக் கூடாது. கொடுப்பவரும், வாங்குபவரும் வாசல் படிக்கு உள்ளே இரந்து கொடுக்க/வாங்க வேண்டும்.

செல்வம் நிலைக்க, விருத்தி அடைய, பணம் கொடுக்கல்வாங்கல், செவ்வாய் கிழமை, செவ்வாய் ஹோரையில் நடப்பது உத்தமம். கொடுப்ப வருக்கு பணம் திரும்ப கிடைக்கும். வாங்குபவரால் பணத்தை திரும்ப கொடுக்க இயலும். திரும்பகொடுப்பதும் செவ்வாய் ஹோரையில் நடப்பது சிரேஷ்டம்.

சங்கடஹர சதுர்த்தி விரதம்


நமக்கு வரும் சங்கடம் அனைத்தையும் நீக்கிச் சவுபாக்கியம் தரவல்லது சங்கடஹர சதுர்த்தி விரதம். ஆவணி மாதம் தேய்பிறைச் சதுர்த்தி தினத்தில் இவ்விரதத்தைத் தொடங்க வேண்டும். இரவு சந்திரன் உதயமாகும் பொழுது விநாயகரை வழிபட்டுச் சந்திரனுக்கு அர்க்கியம் தர வேண்டும் என்கிறது சாத்திரம். 

அன்று சந்திரன் தெரியாமல் இருந்தால் அடுத்த நாள் பூஜை செய்யவேண்டும். மாசி மாதம் தேய்பிறைச் சதுர்த்தி மிக மிக உயர்வானது. அதுவும் செவ்வாய்க்கிழமை அந்நாள் அமைவது மிகவும் விசேஷம். 

அது மகா சங்கடஹர சதுர்த்தி என்றழைக்கப்படுகிறது. அந்நாளில் காலையிலிருந்து உபவாசம் இருந்து கணபதியைத் தியானிக்க வேண்டும். இரவு பூஜை முடித்த பின் கணேச நிவேதனத்தை மட்டும் உண்டு தனிமையில் உறங்க வேண்டும். 

சதுர்த்தியின் மகிமை:

சங்கடஹர சதுர்த்தியின் மகிமையை முருகப் பெருமான் முனிவர்க்கு எடுத்துரைக்கிறார். ஸ்காந்தத்தில் எல்லா விரதங்களிலும் இவ்விரதம் மிகச் சிறந்தது சங்கடஹரணம் என்றும் இது அழைக்கப்பெறும். 

காட்டில் தருமபுத்திரர் இவ்விரதத்தை மேற் கொண்டார். பாண்டவர்க்கு இவ்விரதத்தை உபதேசித்தவர் கண்ணபிரான். முதல் முதலில் தன் தாய் பார்வதி தேவிக்குக் கணபதியே இவ்விரதத்தைச் சொல்லி அருளினார். பார்வதி! ஆண்டுக்காலம் விரத்தைத்தை மேற் கொண்டு தன் பதியை அடைந்தாள். 

இந்திரன், சிவன், ராவணன் போன்றோர் இவ்விரதத்தினால் நற்பயன் அடைந்திருக்கின்றனர். அனுமன் சீதையைக் கண்டதும், தமயந்தி நளனை அடைந்தது. அகலிகை கவுதமரை அமைந்தது போன்றவை நிகழ்ந்ததும் விரதத்தின் மகிமையால் தான்.

நெற்றில் குங்குமம் வைப்பது ஏன்?

நெற்றியில் புருவமத்தியில் மூளையின் முன்புறமாக, பைனீயல் க்ளாண்ட் என்ற சுரப்பி அமைந்துள்ளது. இதை, யோக சாஸ்திரத்தில் ஆக்ஞா சக்ர ஸ்தானம் என குறிப்பிட்டுள்ளனர். மூன்றாவது கண், ஞானக்கண் என்றும் இதற்குப் பெயருண்டு. சிவபெருமானுக்கு ஆக்ஞா சக்கரமே நெற்றிக்கண்ணாக இருப்பதைக் காணலாம். திபெத்தில் லாமாக்கள் ஞானக்கண் திறப்பது என்றொரு சடங்கு செய்கின்றனர். இதன் சிறப்பை உணர்வதற்காகவே நெற்றியில் குங்குமம் இடுகிறோம். பெண்கள் மட்டுமின்றி, ஆண்களும் குங்குமம் வைக்க வேண்டும்.

உடல் முழுவதும் மின்காந்த சக்தி வெளிப்பட்டாலும், நெற்றியில் புருவமத்தியிலுள்ள நுண்ணிய பகுதியில் அதன் சக்தி அதிகமாக வெளிப்படுகிறது. இதன் காரணமாகத்தான், மனக்கஷ்டம் வந்தாலோ, ஏதாவது ஒன்றை தீவிரமாக சிந்தித்தாலோ அந்த இடம் உஷ்ணமடைந்து தலைகனம், தலைவலி போன்ற பிரச்னை உண்டாகிறது.

இதை தவிர்த்து, குளிர்ச்சியை உண்டாக்கவே சந்தனம், குங்குமம் போன்றவற்றை நெற்றியில் இடுகிறோம். இதனால், உடல், மனோசக்தி வீணாகாமல் பாதுகாக்கப்படுகிறது. முகம் களையோடு பிரகாசமாகத் திகழ்கிறது. பொட்டு வைப்பது என்பது அலங்காரத்திற்காகவும், ஆன்மிக காரணத்திற்காகவும் மட்டுமல்ல... ஆரோக்கியத்திற்காகவும் நம்  பெரியவர்கள் இப்பழக்கத்தை ஏற்படுத்தினர். 

திருஷ்டி இருந்தால் எப்படி சுத்தி போடுவது?

நமக்கோ அல்லது நம் குடும்பத்தில் இருப்பவர்களுக்கோ திருஷ்டி தோஷங்கள் ஏற்பட்டுள்ளதா என்பதை பல நிகழ்ச்சிகள் மூலமும், சில அறிகுறிகள் மூலமும் தெரிந்து கொள்ளலாம். திருஷ்டி, தோஷத்தால் பாதிக்கப்பட்டவரின் வீட்டில் தொடர்ந்து ஏதாவது பிரச்னைகள், தடைகள், சோகம், பிரிவு, நஷ்டம், கைப்பொருள் இழப்பு என வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாக வந்துகொண்டே இருக்கும்.

ஒரு சிக்கல் தீருவதற்குள் அடுத்த பிரச்னை காத்துக் கொண்டு இருக்கும். பெண்களுக்கு உடல் சோர்வு, மனச்சோர்வு, இல்லாத ஒன்றை கற்பனை செய்து பயப்படுதல், கணவன்-மனைவி இடையே காரணம் இல்லாத பிரச்னைகள், சந்தேகங்கள், உறவினர்களுடன் பகை, சுபநிகழ்ச்சிகளில் தடை, ஒருவர் மாற்றி ஒருவருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படுதல், சாப்பிட பிடிக்காமல் போவது, எல்லோரிடமும் எரிந்து விழுவது, கெட்ட கனவுகள், தூக்கமின்மை, அடிக்கடி கொட்டாவி விடுவது, எதிர்மறை எண்ணங்கள் தோன்றுவது போன்றவை உண்டாகும். இதன்மூலம் கண் திருஷ்டி ஏற்பட்டுள்ளது என்பதை உணர்ந்துகொள்ளலாம்.

திருஷ்டி பரிகாரங்கள்:
ஆரத்தி, திலகம்: விசேஷ வைபவங்கள், சுபநிகழ்வுகளிலும், மணமக்கள் வீட்டினுள் வருதல், தாயும் குழந்தையும் முதல் முறை வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் ஆரத்தி எடுத்து திலகம் இடுவது சங்க காலம் தொட்டே இருந்து வருகிறது. ஆரத்தி எடுக்கும்போது பயன்படுத்தப்படும் குங்குமம் கலந்த நீர், வெற்றிலை மீது எரியும் கற்பூரம் ஆகியவற்றுக்கு தீய சக்திகளை விரட்டும் ஆற்றல் உண்டு.

வாழை மரம்: விசேஷங்களின்போது குலை தள்ளி, பூவுடன் இருக்கும் வாழைமரத்தை வாசலில் கட்டுவார்கள். இதற்கு காரணம் வாழைக்கு திருஷ்டி தோஷங்களை ஈர்த்துக் கொள்ளும் குணம் உண்டு என்பதுதான்.

வீட்டிற்குள் வைக்கும் பொருட்கள்: வீட்டுக்கு, அலுவலகத்துக்கு வருபவர்களின் பார்வையை, கெட்ட எண்ணங்களை, குரூர சிந்தனைகளை திசை திருப்புவதற்கு பெரிய முகம் பார்க்கும் கண்ணாடியை வரவேற்பறையில் அல்லது வீட்டின் உள்வாசலில் வைக்கலாம். மீன் தொட்டி வைத்து அதில் கருப்பு, சிகப்பு மீன்களை வளர்க்கலாம். கண் திருஷ்டி கணபதி படம் வைக்கலாம். மிக மெல்லிய வாத்ய இசை, மந்திரங்களை ஒலிக்க விடலாம். வாசலில் கற்றாழை, சப்பாத்தி கள்ளி, முள் அதிகம் உள்ள செடிகள், மஞ்சள் ரோஜா செடி ஆகியவற்றை வளர்க்கலாம். ஆகாச கருடன் என்று ஒரு வகை கிழங்கு உள்ளது.  அதை வாங்கி மஞ்சள், சந்தனம், குங்குமம் வைத்து கருப்பு கம்பளி கயிற்றில் கட்டி வீட்டின் வாசலில் தொங்க விடலாம்.

உப்புக்குளியல்: வாரம் ஒருமுறை கல் உப்பை குளிக்கும் தண்ணீரில் கலந்து குளித்து வர திருஷ்டியால் ஏற்படும் உடல் அசதி, சோம்பல் நீங்கும். குறிப்பாக அவரவர் பிறந்த கிழமை அல்லது செவ்வாய்க்கிழமையில் இவ்வாறு குளிக்கலாம்.

எலுமிச்சம்பழம்: வியாபாரத் தலங்களில் திருஷ்டி நீங்க எலுமிச்சம்பழத்தை அறுத்து ஒரு பகுதியில் குங்குமத்தை தடவியும், மற்றொரு பகுதியில் மஞ்சள் பொடியைத் தடவியும் வைக்கலாம். இதை ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை செய்வது நலம் தரும். பழத்தை மாற்றும்போது முதலில் வைத்த பழத்தை மூன்று முறை கடையை சுற்றி தெருவில் வீசிவிடவும்.

கடல் நீர்: வளர்பிறையில் வரும் செவ்வாய், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைக்குச் சென்று கடல் நீரை எடுத்து வந்து அதில் மஞ்சள் பொடியை கலந்து கடை, அலுவலகம், வீடு ஆகியவற்றில் தெளிப்பது சிறந்த பரிகாரம்.

திதிகள்: அமாவாசை, பவுர்ணமி, அஷ்டமி, நவமி போன்ற நாட்களில் காலை, மாலை இருவேளையும் சாம்பிராணி பொடியுடன், கருவேலம்பட்டை பொடி, வெண் கடுகுத்தூள் ஆகியவற்றை கலந்து வீடு, கடை அலுவலகத்தில் தூப, தீப, புகை காட்ட திருஷ்டியும், தீய சக்திகளும் வெளியேறும்.

சென்னையை அடுத்த மகாபலிபுரம் போகும் வழியில் உள்ள திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோயிலில் உள்ள உற்சவ மூர்த்திகளான பெருமாளுக்கும், தாயாருக்கும் தாடையில் திருஷ்டி பொட்டு இயற்கையாகவே அமைந்துள்ளது. இது திருஷ்டி நீக்கும் ஸ்தலமாகும். இங்கு சென்று வழிபடுவதன் மூலம் பொறாமை குணங்கள் மறையும். ஸ்ரீவில்லிபுத்தூர் சென்று ஆண்டாளை தரிசித்து குங்கும அர்ச்சனை செய்து அங்குள்ள கண்ணாடி மாளிகையில் தெரியும் உங்கள் உருவத்தை பார்க்கலாம்.