காகம் சொல்லும் சகுனங்கள்...!

 நமது இறந்த முன்னோரின் அம்சமாக திகழ்வது காகங்கள். அத்தகைய காகங்கள் கரைந்தால் ஏற்படும் சகுனங்கள் என்ன என்பதை தெரிந்துக் கொள்வோம்.

🐦 பயணத்தின்போது காகம் வலமிருந்து இடம் போவது தன லாபத்தைக் குறிக்கும். இடமிருந்து வலம் போவது தன நஷ்டத்தை உண்டாக்கும்.

🐦 பயணிக்கும் போது காகம் கரைந்து கொண்டே பறந்து வந்தால், பயணத்தைத் தவிர்த்துவிட வேண்டும். ஒரு காகம் மற்றொரு காகத்துக்கு உணவு+ட்டும் பார்த்தால், செல்லும் பயணம் இனிதாகும்.

🐦 காகம் மிகவும் அமைதியாக உட்கார்ந்து கிழக்கு திசை பார்த்துக் கரைந்தால் அரசாங்க ஆதரவு, நண்பர் சேர்க்கை, தங்கத்தால் லாபம், நல்ல உணவு கிடைக்கும்.

🐦 யாத்திரை செல்ல புறப்படும்போது, காகம் எந்தப் பொருளைத் தன் அலகால் கொண்டு வருகிறதோ, அந்தப் பொருளின் வகையில் லாபம் பயணத்தில் கிட்டும்.

🐦 பெண் ஏந்தியுள்ள குடத்தின் மீது காகம் அமர்ந்திருக்கும் காட்சியைக் கண்டால், தனலாபம் உண்டாகும். அந்தக் குடத்தின் மீது காகம் எச்சமிட்டால், நல்ல உணவு கிடைக்கும்.

🐦 காரணமின்றிக் கரையும் காகம், பஞ்சம் வரப் போவதை குறிக்கும். காகம் நெல் போன்ற தானியங்களை அள்ளிச் சென்று சேமிப்பது, பஞ்சம் வரும் என்பதற்கான அறிகுறியாகும்.

🐦 காரணமின்றிச் சுற்றிச் சுற்றிப் பறக்கும் காகம் எதிரிகள் தொல்லையை குறிக்கும்.

🐦 பூஜை செய்வது போல் காகம் பூக்களைக் கொண்டு மேலே தூவினால், பயணத்தால் பலவிதமான தனலாபம் ஏற்படும். வாகனம், குடை, காலணி ஆகியவற்றின் மீது எச்சம் இட்டால், பயணத்தின்போது உணவுக்குப் பஞ்சம் இருக்காது.

🐦 நல்ல மரங்களில் காகம் கூடு கட்டுவது நற்பலனையும், பட்டுப்போன, எரிந்துபோன மரங்களில் கூடு கட்டுவது வரப்போகும் துன்பத்தையும் குறிக்கும்.

🐦 பூக்கள், பழங்கள் அல்லது ரத்தினக் கற்களை ஒரு வீட்டில் காகம் இட, அந்த வீட்டில் ஆண் குழந்தை பிறக்கும். கூடு கட்ட உபயோகிக்கும் புல், குச்சி போன்றவற்றைக் கொண்டு போட்டால், பெண் குழந்தை பிறக்கும்.

🐦 பல காகங்கள் கரைந்து கொண்டு கூட்டமாக ஒரு ஊரின் மேலாகப் பறப்பது, அவ்வு+ருக்கு ஏற்பட உள்ள பெரும் ஆபத்தைக் குறிக்கும்.

🐦 சூரியனைப் பார்த்து காகம் கரைந்தாலும், சிவந்த பொருட்கள், சிவந்த மலர்கள் ஆகியவற்றைக் கொண்டு வந்து வீட்டினுள் போட்டாலும், நெருப்பினால் துன்பம் நேரிடும்.

🐦 பால் உள்ள மரங்கள் மற்றும் ஆற்றங்கரைகளில் இருந்து கொண்டு காகம் கரைவது, நல்ல மழை உண்டு என்பதற்கான சகுனம்.