❂ வீட்டில் தெய்வ சக்தி அதிகம் இருந்தால் கெட்டது விலகும், நல்லது விளையும், யாருடைய கண் திருஷ்டியும், பில்லி சூனியமும், நம்மை ஒன்றும் செய்யாது. சில செயல்கள் செய்வதன் மூலம் தெய்வ சக்தி கூடும் என சில கூற்றுகள் கூறுகின்றன. வீட்டில் தெய்வ சக்தி நுழைவதற்கும் பறவைகளுக்கும் இவ்வளவு சம்பந்தமா ?
❂ வீட்டிற்குள் தெய்வ சக்தி நுழைய வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். ஏனென்றால், சாதாரணமாக மனிதன் மண் மீது ஒரு புதுவீடு கட்டி குடி போகிறார்.
❂ அவர் வீடு கட்டுவதற்கு முன்பு அந்த மண் மீது என்ன இருந்தது, எது வாழ்ந்தது, மண்ணிற்கு அடியில் என்ன புதைந்து கிடந்தது என்பதை அறிந்துகொள்ளக் கூடிய ஞானம் மனிதனுக்கு கிடையாது. ஆனால், சில பறவைகளுக்கு அதைப்பற்றிய ஞானம் நிறைய உண்டு.
❂ குறிப்பாக சிட்டுக்குருவி, புறா, அதற்கடுத்தது அணில் இவைகளுக்கெல்லாம் சூசகமான, சூட்சமமான சக்தியையெல்லாம் உணரக்கூடிய ஆற்றல் அதிகம் உண்டு. ஏன் தெய்வ சக்தி நுழைய வேண்டும்?
❂ ஒரு வீட்டில் தெய்வ சக்தி அதிகம் இருந்தால், அந்த வீட்டில் நல்லவை அதிகம் நடக்கும், வீட்டில் இருக்கும் நபர்களை எந்த ஒரு கெட்ட சக்தியும் அண்டாது. வீட்டில் செல்வமும், வெற்றியும் அதிகரிக்கும்.
பறவைகள் : ❂ வீட்டில் அணில், சிட்டுக்குருவி, புறா, போன்ற பறவைகள் மற்றும் விலங்குகள் இருந்தால் தெய்வ சக்தி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. இந்த உயிரினங்களுக்கு தெய்வ சக்தி அறியும் ஆற்றல் உள்ளது எனவும் சொல்லப்படுகிறது.
ஜீவசக்தி : ❂ புதிதாக குடிபோகும் வாடகை வீடு அல்லது சொந்த வீட்டிற்கு தெய்வ சக்தியினை கொண்டு வர ஜீவசக்தி கொண்ட ஏதாவது ஒரு உயிரினத்தை கொண்டு செல்ல வேண்டும். மனிதர்களை காட்டிலும் பறவைகளிடம் இந்த ஜீவசக்தியானது அதிகமாக உள்ளது.
நெற்கதிர் : ❂ உங்கள் வீட்டு வாசலில் நெற்கதிரை கட்டி தொங்கவிடுவதால் குருவி, புறா போன்ற பறவைகள் அதை உண்ண வந்து செல்லும். இந்த சந்தர்ப்பத்தில் அவை அங்கேயே கூடு கட்டி வாழ்ந்து குஞ்சு பொரிக்கவும் வாய்ப்புகள் உள்ளன.
கலைக்க கூடாது : ❂ புறா, குருவி போன்ற பறவைகள் கூடு கட்டினால் அதனை கலைக்கக்கூடாது. தெய்வ சக்தி கொண்டு வரும் திறன் கொண்டவை இவை என்பதால், இவற்றின் கூட்டை கலைப்பது, வீட்டிற்கு கெட்ட சகுனமாக அமையலாம்.
விரட்டவும் வேண்டாம் : ❂ புறா, குருவி போன்ற பறவைகள் மற்றும் அணில் போன்ற உயிரினங்கள் உங்கள் வீட்டிற்கு வந்தால், அவற்றை விரட்ட வேண்டாம். இவை நமது வீட்டிற்கு வந்து போனாலே நமக்கு நல்லது நடக்கும்.
❂ ஜீவன் என்றால், மனிதன் மட்டுமல்ல, மனிதனைத்தாண்டி சிட்டுக் குருவி போன்றவற்றிற்கெல்லாம் ஜீவாதார சக்தி அதிகமாக இருக்கிறது.
❂ புறா கூடு கட்ட வழி செய்வது, அணில் கூடு கட்டினால் கலைக்காமல் இருப்பது, சிட்டுக்குருவி வீடு கட்டுவது போன்றதெல்லாம் சாதகமான சக்திகளை கொண்டு வருவதற்கான ஆத்மாக்கள் இவைகளெல்லாம்.
❂ இது போன்ற சாதகமான சக்தியைக் கொண்டு வருவனவற்றை நாம் விரட்டக்கூடாது, இவையெல்லாம் வந்துவிட்டுப் போனாலே நமக்கு நல்லது நடக்கும்.