ஏன் அரச மரத்தை வலம்வர வேண்டும்? அதற்கான காரணங்கள் என்ன?
 பண்டைய காலத்தில் இருந்தே நம் முன்னோர்கள் மரங்களை தெய்வமாக வழிபட்டனர். நம்முடைய வழிபாட்டில் வேம்பு, ஆல், அரசு என பல மரங்களுக்கு முக்கிய இடமுண்டு. இந்த மரங்களை விட அரச மரத்திற்கு தனி சிறப்பு உண்டு. அது ஏன்? எதற்கு? என்பதை பற்றி பார்ப்போம்.
🌳 அரச மரத்துக்கு அறிவை வளர்க்கும் சக்தி அதிகமுண்டு. அரச மரத்தின் அடியில் சிறிது நேரம் அமர்ந்திருப்பதும், அரச மரத்தை வலம் வருவதும் மிகவும் நன்மையைத் தரும். இதன் அடியில் அமர்ந்தாலே மனம் தௌpவடையும்.
🌳 அரச மரத்தின் காற்று கருப்பை கோளாறுகளை போக்கும் தன்மையுடையது. அதுபோல் மூளையின் செயல்பாடுகளை தூண்டி, மன அமைதியைக் கொடுக்கும் குணமும் இதற்கு உண்டு. அதிகாலை சு+ரியன் உதயமாகும் நேரம் முதல் காலை சுமார் 10.40 மணி வரையில், சு+ரியனின் கிரணங்கள் அரச மரத்தில் விழுவதால், அப்போது அரச மரத்திலிருந்து வெளிவரும் காற்று நமக்கும், நமது உடலுக்கும் நன்மையைத் தரும்.
🌳 அரசும், வேம்பும் ஒன்றாக வளரும் இடத்தில் ஓர் உயிரியல் மின்சக்தி நிலவுகிறது. இவற்றை வலம் வரும்போது உடலில் உள்ள சுரப்பிகள் தூண்டப்பட்டு சுரப்பு நீர் சமப்படுத்தப்படுகிறது.
🌳 அரச இலை அசையும்போது அதன் சத்து காற்றில் பரவுகிறது. ஓர் அரச மரம் நாள் ஒன்றுக்கு 1,800 கிலோ கரியமில வாயுவை உட்கொண்டு, 2,400 கிலோ பிராண வாயுவை வெளியிடுகிறது.
🌳 அரச மரத்தை அதிகாலையில் வலம் வந்தால் அது வெளிவிடும் பிராண வாயுவில் ஓசோனின் தாக்கம் அதிகம் உள்ளதால் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. பெண்களின் கர்ப்பபை கோளாறுகள் நீங்கும். ஆண்களுக்கு சுக்கில விருத்தி அதிகரிக்கும். இதனால் குழந்தைப்பேறு உண்டாகும்.
🌳 அரச மரத்தின் இலை, வேர், பட்டை அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டது. அதிகளவு ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் மரங்களுள் ஒன்றான அரச மரத்தை நட்டு அதன் பயனை நாமும், நம் சந்ததியினரும் பெற வழி செய்வோம்.