கோவிலின் நுழை வாயிலில் குறுக்காக இருக்கும் படிக்கட்டின் மேல் நின்று செல்லாமல் அதனை தாண்டி செல்ல வேண்டும் என்று பெரியவர்கள் கூறுகிறார்களே! ஏன் தெரியுமா?
➠ நாம் எப்போது கோவிலுக்குச் சென்றாலும், கோயிலுக்குள் நுழையும் முன்பு முதலில் நமது கை, கால், பாதங்களை கழுவ வேண்டும்.
➠ பின் துளி நீரை எடுத்து தலையை சுற்றி வட்டமிட்டு தௌpத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் நமது உடலையும், உள்ளத்தையும் தயார் படுத்திக் கொள்ளும் முறையாகும்.
➠ பின்னர் வாயிற்காப்போர்கள் ஆன துவாரபாலகர்களின் அனுமதியை வாங்கிக் கொண்டு உள்ளே செல்ல வேண்டும். உள்ளே செல்வதற்கு முன் அங்குள்ள வாயிற்படியை கடந்து செல்ல வேண்டும்.
➠ வாயிற்படியை தாண்டும் போது, ஒருவர் கொண்டு வந்த எதிர்மறை வினைகள், எதிர்மறை எண்ணங்கள், கெட்ட செயல்கள், கவலைகள் எல்லாவற்றையும் இங்கேயே விட்டு உள்ளே செல்கின்றேன்.
➠ ஆண்டவா! உன் கருணையுடன் கூடிய ஆசிர்வாதமும், நல்ல வினைகளுமே எனக்கு கிடைக்க வேண்டும் என்று கும்பிட்டவாறே அந்த படியை தாண்ட வேண்டும்.
➠ ஒரு வேளை நாம் அந்த படியின் மேல் நின்று கடந்து சென்றால், நாம் அவற்றை கூடவே உள்ளே எடுத்து செல்வதாக அர்த்தம் ஆகும்.
➠ கோவில் என்பது நாள் முழுவதும் கூறப்படும் மந்திரங்களாலும், நாதஸ்வரம், கெட்டி மேள சத்தங்களாலும், பேசப்படும் மங்களகரமான வார்த்தைகளாலும், முழுவதும் நல்ல எண்ணங்களாலேயே நிரம்பியிருக்கும்.
➠ எனவே தான் கோயிலுக்குச் சென்று அந்த நல்ல எண்ணங்களை பெற்று உயர்வுடன் வாழுங்கள் என்று வாழ்த்துகிறோம்.