தீபம் ஏற்றினால் சாபம் நீங்குமா..?

❖ தீபம் என்பது இறைவனின் அம்சம். தீபத்தை நாம் எந்த அளவுக்கு மனம் ஒன்றி வழிபடுகிறோமோ அந்த அளவுக்கு இறைவனை நெருங்க முடியும். ஒருவர் தினமும் விளக்கேற்றி இறைவழிபாடு செய்தால், அவர் மெய் உணர்வைப் பெற முடியும் என்று அப்பர் கூறியுள்ளார்.

தீபத்தால் சாபம் நீங்குமா :

★ கவனிப்பாரின்றி உள்ள கோவிலில் தீபம் ஏற்றி வைப்பது பித்ரு தோஷங்களையும், பித்ருக்களால் ஏற்பட்ட சாபத்தையும் போக்கும் சக்தி வாய்ந்த பரிகாரமாகும்.

★ வறுமையினால் துன்பப்படும் குழந்தைகளுக்கு உணவளிப்பது, பசு மாட்டைத் தினமும் பூஜித்தல், வேதம் அறிந்த பெரியோர்களின் ஆசியைப் பெறுதல், சிதைவு அடைந்த கோவில்களின் புனர்நிர்மாணத்திற்கு உதவுதல், அனாதை பிரேதத்தை, ஈமச் சடங்குகள் செய்ய வசதி இல்லாத குடும்பத்தினருக்குப் பொருள், பணம் உதவி செய்தல் போன்ற மகத்தான புண்ணிய காரியங்களின் பலன்கள் மேற்கூறிய தோஷங்களுக்குச் சக்தியுள்ள பரிகாரங்களாகும்.

பரிகாரங்களும், இனிய பலன்களும் :

✰ பசியோடு வருபவரை உபசரித்தால் மோட்சம் கிட்டும்.

✰ பசுவிற்கு பசும்புல், அகத்திக்கீரை, பழம் தந்தால் பிள்ளை வரம் கிடைக்கும்.

✰ துளசிச் செடி நட்டாலோ அல்லது அதற்கு தண்ணீர் ஊற்றினால் பாவம் அகலும்.

✰ மலர்ச்செடிகள் நட்டு வைத்தால் மங்கலங்கள் பெருகும்.

✰ ஆலயங்களைச் சுத்தம் செய்து கோலமிட்டால் ஆண்டவனின் அருள் கிடைக்கும்.

✰ தொழு நோயாளிக்கு வயிராற விருந்து படைத்தால் கர்மம் அகலும்.

✰ தினசரி தியானம் செய்வதால் நிம்மதியும், ஞானமும் கூடிவரும்.

✰ காக்கைக்கு காலையில் உணவிட்டால் பித்ருக்களால் நன்மை உண்டாகும்.

✰ உழவாரப் பணிகளை (கோவிலுக்கு சேவை செய்வது) மேற்கொண்டால் பிறவிப் பயனை அடைய இயலும்.

பலன் அளிக்க கூடிய பரிகார ஸ்தலங்கள் :

➚ சூரியன் - சூரியனார் கோவில்

➚ சந்திரன் - திருப்பதி

➚ குரு - ஆலங்குடி, திருச்செந்தூர்

➚ சுக்கிரன் - ஸ்ரீ ரங்கம்

➚ புதன் - திருவெண்காடு, மதுரை மீனாட்சி அம்மன் கோவில்

➚ செவ்வாய் - வைத்திஸ்வரன் கோவில்

➚ சனி - திருநள்ளாறு

➚ ராகு - திருநாகேஷ்வரம்

➚ கேது - காளாஸ்திரி (ஆந்திரப் பிரதேசம்)