👉 எல்லா தினங்களுமே தெய்வத்தை வழிபடும் நாட்கள் தான். இறைவனை எப்படி வணங்கினாலும் பலன் கிடைக்கும். ஆனால் ஒவ்வொரு பலனைப் பெறவும், கடவுளின் வெவ்வேறு வடிவங்களை கும்பிடுவதும், குறிப்பிட்ட நாட்களில் குறிப்பிட்ட தெய்வத்தை ஆராதிப்பதும் கூடுதல் பலன் கிட்ட வேண்டும் என்பதற்காக தான். நாம் செய்யும் செயல் வெற்றி பெற எந்த கடவுளை வணங்க வேண்டும் என்பதை பார்ப்போம்.
நினைத்த காரியம் நடக்க :
🌺 விக்னங்கள், இடையு+றுகள் நீங்க - விநாயகர்
🌺 செல்வம் சேர - ஸ்ரீ மகாலட்சுமி, ஸ்ரீ நாராயணர்
🌺 நோய் தீர - ஸ்ரீ தன்வந்தரி, தட்சிணா மூர்த்தி
🌺 வீடும், நிலமும் பெற - ஸ்ரீ சுப்ரமண்யர், செவ்வாய் பகவான்
🌺 ஆயுள், ஆரோக்கியம் பெற - ருத்திரன்
🌺 மனவலிமை, உடல் வலிமை பெற - ராஜராஜேஸ்வரி, ஸ்ரீ ஆஞ்சநேயர்
🌺 கல்வியில் சிறந்து விளங்க - ஸ்ரீ சரஸ்வதி
🌺 திருமணம் நடைபெற - ஸ்ரீகாமாட்சி அம்மன், துர்க்கை
🌺 மாங்கல்யம் நிலைக்க - மங்கள கௌரி
🌺 புத்திர பாக்கியம் பெற - சந்தான கிருஷ்ணன், சந்தான லட்சுமி
🌺 தொழில் சிறந்து லாபம் பெற - திருப்பதி வெங்கடாசலபதி
🌺 புதிய தொழில் துவங்க - ஸ்ரீகஜலட்சுமி
🌺 விவசாயம் தழைக்க - ஸ்ரீ தான்யலட்சுமி
🌺 உணவுக் கஷ்டம் நீங்க - ஸ்ரீ அன்னபூரணி
🌺 வழக்குகளில் வெற்றி பெற - விநாயகர்
🌺 சனி தோஷம் நீங்க - ஸ்ரீ ஐயப்பன், ஸ்ரீ ஆஞ்சநேயர்
🌺 பகைவர் தொல்லை நீங்க - திருச்செந்தூர் முருகன்
🌺 பில்லி, சூன்யம், செய்வினை அகல - ஸ்ரீ வீரமாகாளி, ஸ்ரீ நரசிம்மர்
🌺 கண் பார்வைக் கோளாறுகள் - சிவபிரான், சுப்ரமண்யர், விநாயகர்
🌺 காது, மூக்கு, தொண்டை நோய்கள் - முருகன்
🌺 மாரடைப்பு, இருதய கோளாறுகள் - சக்தி, கருமாரி, துர்க்கை
🌺 நீரிழிவு, சிறுநீரகக் கோளாறு - முருகன்
🌺 மூட்டுவலி, கால் வியாதிகள் - சக்கரத்தாழ்வார்
🌺 எலும்பு வியாதிகள் - சிவபெருமான், முருகன்
🌺 ரத்தசோகை, ரத்த அழுத்தம் - முருகன், செவ்வாய் பகவான்
🌺 அம்மை நோய்கள் - மாரியம்மன்
🌺 ஞாபகசக்தி குறைவு - விஷ்ணு வெற்றிப் பாதையை நமக்கு அடையாளம் காட்டும் அந்த பரம்பொருளின் ஆசியும் நம் அனைவருக்கும் கிடைக்கட்டும்........!