மகிஷன் என்னும் அரக்கனைக் கொன்று மகிஷாசுரமர்த்தினி என்றும், பத்ரகாளி என்றும் பெயர் பெற்றவள் அன்னை ஆதிபராசக்தி. நவராத்திரி விழா நடப்பதே மகிஷாசுரமர்த்தினியின் பெயரால் தான். இந்த தேவி, ஈரோடு மாவட்டம் அந்தியூரில் அருள்பாலிக்கிறாள்.
அந்தி என்றால் இறுதி என பொருள்படும். நமக்கு ஏற்படும் துன்பங்களுக்கெல்லாம் இறுதியான முடிவை அளிக்கும் வல்லமை படைத்தவள்.
🌿 மூலவர் - பத்ரகாளி
🌿 பழமை - 500 - 1000 வருடங்களுக்கு முன்
தல வரலாறு : 🔔 பசு ஒன்று காட்டில் மேய்ந்து விட்டு தினசரி பாலின்றி வெற்று மடியோடு வீட்டுக்கு வந்துள்ளது. பசுவின் உரிமையாளர் அப்பசுவைத் தொடர்ந்து சென்று கண்காணித்தார். அப்போது, ஒருபுற்று அருகே பசு சென்றது. புற்றிலிருந்து ஐந்து தலை நாகமொன்று வெளிப்பட்டு பசுவின் ஐந்து மடிகளிலிருந்து பாலைக் குடித்தது. இதைப்பார்த்ததும் பசுவின் உரிமையாளர் அதிர்ச்சியுற்றார்.
🔔 அன்றிரவு அவரது கனவில் தோன்றிய ஒரு பெண், நான் பத்ரகாளி, நான் உன் பசுவின் பால் குடித்து மனநிறைவு பெற்றேன். என்னை இவ்விடத்திலேயே பிரதிஸ்டை செய்து வழிபடுக என்றாள். அம்மனின் அருள்வாக்கை ஏற்று அந்த இடத்தில் பக்தர்கள் கோயில் கட்டி வழிபடத் துவங்கினர். அம்பாளுக்குப் பத்ரகாளி என்ற பெயர் சூட்டப்பட்டது.
தல பெருமை : கனவில் பலன்: 🔔 அந்தியூரை அடுத்த எண்ணமங்கலத்தில் கணவனின் கொடுமை தாங்க முடியாத ஒரு பெண் தன்னுடைய கைக்குழந்தையுடன் இரவில் கிணற்றில் குதித்தாள். தூங்கி கொண்டிருந்த பூசாரியின் கனவில் அம்மன் சென்று உடனடியாக இளம்பெண்ணையும், குழந்தையையும் காப்பாற்ற கூறினாள். அதன்படி பூசாரி, கிணற்றில் குதித்து காப்பாற்றினார். இதை தொடர்ந்து கனவில் வந்து பலன்சொல்லும் அம்மனாக அந்தியு+ர் பத்ரகாளியம்மன் திகழ்கிறாள்.
சோம்பல் நீக்கும் குணம்: 🔔 சிலருக்கு எந்நேரமும் தூக்கம் வரும். இவர்கள் அந்தியு+ர் பத்ரகாளியிடம் தீர்த்தம் வாங்கிக் குடித்தால் இத்தகைய சோம்பலான உடல்நிலைக்கு விடிவுகாலம் வரும்.
பிரார்த்தனை : 🔔 திருமணம், நிலம் வாங்குதல், விற்றல், கிணறு வெட்டுதல் வியாபாரம் துவங்குதல், கல்வி போன்ற விஷயங்களுக்கு அம்மன் சிரசில் பு+ வைத்து, தொழில் துவங்கலாமா என வாக்குக் கேட்கும் வழக்கம் உள்ளது.
🔔 பெண்கள் தங்கள் மாங்கல்ய பாக்கியம் நிலைக்க, தங்கள் தாலியையே காணிக்கையாக தருவதாக அம்பாளிடம் வேண்டுகின்றனர். குறிப்பாக, உயிருக்கு போராடும் கணவருக்காக இத்தகைய பிரார்த்தனையைச் செய்வது மரபாக உள்ளது.