சம்மர் வந்தாச்சு கூலா இருக்க சில டிப்ஸ்!

☀ பருவகாலம் என்பது காலநிலை, சூழலில் ஆகியவற்றால் ஏற்படும் மாற்றத்தால் குறிப்பிடப்படுகின்ற வருடத்தின் பிரிவு ஆகும்.

☀ சூரியனைச் சுற்றிவரும் பூமியின் ஆண்டுச் சுழற்சி மற்றும் சுழற்சியின் சமதளத்திற்கு தொடர்புடைய பூமி அச்சின் சாய்வு ஆகியவற்றினால் பருவகாலம் ஏற்படுகிறது. மிதமான தட்பவெப்பமுள்ள துருவப் பிரதேசங்களில் பூமியின் மேற்பரப்பை எட்டும் சூரிய ஒளியின் அடர்த்தியில் ஏற்படும் மாற்றம், விலங்குகள் செயலற்றிருத்தல் அல்லது இடம்பெயர்தலுக்கு காரணமாக அமைவது மற்றும் தாவரங்கள் வளர்ச்சியை நிறுத்திக்கொள்வது ஆகியவற்றால் பருவங்கள் இலகுவாக வேறுபடுத்திப் பார்க்கப்படுகின்றன.

☀ மே, சூன் மற்றும் சூலை மாதங்களில் வடக்கு அரைக்கோளம் சூரியனை எதிர்கொள்வதால் நேரடியாக அதிக சூரிய ஒளி படுகிறது. இதே நிலைதான் நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் தெற்கு அரைக்கோளத்தில் ஏற்படுகிறது.

☀ இது சூரியமண்டல நிலைமாற்றத்தை அதிகரிக்கச் செய்யும் கோடை மாதங்களின்போது வானத்தில் சூரியன் உயரமான இடத்தில் இருப்பதற்கு காரணமாகும் பூமி அச்சின் சரிவு ஆகும். இருப்பினும் பருவகால தாமதத்தால் ஜூன், ஜுலை மற்றும் ஆகஸ்ட் மாதங்கள் வடக்கு அரைக்கோளத்தில் வெப்பமான மாதங்களாகவும், டிசம்பர், ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்கள் தெற்கு அரைக்கோளத்தில் வெப்பமான மாதங்களாகவும் இருக்கின்றன.

சம்மரை கூலாக்க சில டிப்ஸ்! :
☀ வெளியில் அலைபவர்கள், வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் ஒரே இடத்தில் உட்கார்ந்தபடி வேலை செய்பவர்கள் அடிக்கடி மோர் மற்றும் இளநீரை குடித்தால் உடல் சூடு குறைவதோடு, உடம்புக்கு புத்துணர்வு கிடைக்கும்.

☀ கோடை காலத்தில் எண்ணை பதார்த்தங்கள், காரம் முதலானவற்றை தவிர்க்கவும்.

☀ சுத்தமான குடிநீரையும் அதிகமாக குடிக்கலாம்.

☀ ஒவ்வொரு நாளும் நான்கு முறையாவது நல்ல சோப்பினால் தேய்த்து முகத்தைக் கழுவிக் கொள்வது நல்லது. இதனால் முகத்தில் வியர்வைத் துவாரங்கள் திறக்கப்படுவதோடு, தோலில் படியும் அழுக்குகளும் அகற்றப்படும்.

☀ குறிப்பாக இரவு படுக்கப் போகும் முன்பு, சோப்பு போட்டு முகத்தை கழுவுவது அவசியம்.

☀ தினமும் இரண்டு வேளை குளிக்கவும்.

☀ வேர்க்குருவைப் போக்க சந்தனத்தை பன்னீரில் குழைத்து, வேர்க்குருக்கள் மீது தடவலாம். நல்ல நிவாரணம் கிட்டும்.

☀ வெயிலின் தாக்கம் தாங்காமல் முகத்தில் கரும்புள்ளிகள் ஏற்படும். குறிப்பாக எண்ணைப் பசையான உடம்பு என்றால் முகத்தில் பருக்கள் ஏற்படுவதும் உண்டு.

☀ கரும்புள்ளிகள் மற்றும் பருக்கள் மறைய பப்பாளிப் பழச்சாறை முகத்தில் தடவவும். எக்காரணம் கொண்டும் பருக்களை கிள்ளக் கூடாது. இதனால் பருக்கள் அதிகமாகும்.

☀ முருங்கைக் கீரை மற்றும் ஏனைய கீரை வகைகளை வாரத்தில் 2 நாட்களாவது உணவில் சேர்த்துக் கொள்வதும் நல்லது.

☀ வியர்வை அதிகமாக சுரப்பதால் தோல் வறட்சியை ஏற்படுத்தும். இதற்கு பழச்சாறு, காய்கறிச்சாறு, சூப் மற்றும் குடிநீரை அடிக்கடி குடிக்கவும்.