கடவுளுக்கு குறிப்பிட்ட பூக்களால் அர்ச்சனை செய்வது ஏன்?

பூக்கள் பல வகை உண்டு. ஆனால் நாம் குறிப்பட்ட பூக்களை மட்டும் தான் பயன்படுத்துகின்றோம். அதிலும் சில குறிப்பிட்ட பூக்களை கொண்டு கடவுளுக்கு அர்ச்சனை செய்கிறோம். பூக்களால் அர்ச்சனை செய்வதால் நமக்கு எண்ணில் அடங்கா பலன்கள் கிடைக்கும். ஒவ்வொரு பூக்களுக்கும் ஒவ்வொரு பலன்கள் உண்டு.

தாமரை - தெய்வீகத்தன்மையை தரவல்லது. நமக்குள் ஒரு சக்தியை தந்து நம்மை இயங்க வைக்கிறது.

முல்லை மற்றும் மல்லிகை பூக்கள் - புனித தன்மையை வழங்கி உள சமநிலையை தரக்கூடியது.

துளசி - துளசியில் மகாவிஷ்ணுவின் அம்சம் நிறைந்துள்ளது. எந்த ஒரு பொருளைத் தானம் செய்யும் போதும், அந்தப் பொருளுடன் துளசியையும் சேர்த்து தானம் செய்வதால், கொடுக்கும் பொருளின் அளவும் மதிப்பும் கூடுகிறது.

மருக்கொழுந்து - நமக்கு தேவை இல்லாத துன்பங்களை நீக்கி தேவையான நன்மைகளை பெற மருக்கொழுந்து மலர் உகந்தது.

ரோஜா - எல்லோருக்கும் பிடித்த ரோஜா மலர்கள் ஆண்டவனிடம் அன்பு அதிகரிக்க செய்து இனிய எண்ணத்தை தந்து தியான உணர்வை வளர்க்கும்.

பவளமல்லி - நம் மனதில் சிறந்த எண்ணங்கள் மேலோங்கவும், விருப்பங்கள் நிறைவேறவும் பவளமல்லி பூக்கள் உதவும்.

எருக்கம் பூக்கள் - நமக்கு பயம் நீங்கி தைரியம் வரவேண்டும் எனில் எருக்கம் பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.

செம்பருத்தி, அரளி - இந்த இரு பூக்களும் நம் மனதை தவறான பாதையில் பயணிக்காது தடுத்து நன்நெறிக்கு இட்டு செல்கிறது.

நந்தியா வட்டப் பூக்கள் - பணம், பொருள் தேவையை நிவர்த்தி செய்யும் தன்மை வாய்ந்தது. குறிப்பிட்ட பூக்களால் அர்ச்சனைப் செய்யப்படும்

கடவுள் : விநாயகர் : விநாயகரை அருகம்புல் கொண்டு தான் அர்ச்சனை செய்வார்கள். பூக்களில் செம்பருத்தி, தாமரை, ரோஜா ஆகிய பூக்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

முருகன் : முருகனுக்கு மல்லிகை, முல்லை, சாமந்தி, ரோஜா ஆகிய பூக்களுடன் சூரியகாந்தி பூவும் பயன்படுத்தலாம்.

துர்க்கை : துர்க்கைக்கு மல்லிகை, முல்லை, செவ்வரளி, செம்பவளமல்லி, சூரியகாந்தி, வெண்தாமரை ஆகிய பூக்களால் அர்ச்சனை செய்யப்படும்.

அஷ்ட புஷ்பங்கள் எனப்படும் தும்பை, வில்வம், செந்தாமரை, செம்பருத்தி, புன்னை, வெள்ளெருக்கு, நந்தியாவட்டம், செண்பகம் என்பவற்றால் அர்ச்சனை செய்யப்படும்.

விஷ்ணுவிற்கு : தாமரை, பவளமல்லி, மருக்கொழுந்து, ஆகிய பூக்களால் அர்ச்சனை செய்யப்படும்.